புலன வார இதழ்

Vinkmag ad

~~~~~~ இலக்கியச்சோலை
புலன வார இதழ்… (8)
~~~~~~
தமிழின் முதல் புலன வார இதழ்
தொடக்கம் : 08-05-2020
~~~~~~
வெள்ளிக்கிழமை தோறும் வெளியாகும்.
நாள் 26-06-2020 ~~~~~~

1. இலக்கியச் செய்தி

‘இலக்கியச்சோலை’யின் ஆகஸ்ட் 2020 இதழ் ‘ கோவைச் சிறப்பிதழாக ‘ மலர்கிறது படைப்புகள் அனுப்ப 98405 27782 எண்ணை தொடர்புகொள்ளலாம்.

2. பிறந்தநாள் வாழ்த்து

02-07-1973
கவிஞர் கலைநிலா
78719 85899

01-07-1951
கவிஞர் ஆலங்காடு கணேசன்
99947 53491

01-07-1953
கவிஞர் பீனிக்ஸ் முருகேசன்
94432 48947

02-07-1953
கவிஞர் இரா. சிவானந்தம்
94866 08131

3. நொடிக்கதை

பெண் அழைப்புக்காக நகை ஏதுவுமின்றி வீற்றிருந்த, அறிமுகம் இல்லாத பரம ஏழை மணமகளைக் கண்ட பானுமதி, உண்டியலில் போடுவதற்காக கொண்டுவந்திருந்த தனது தங்கச் சங்கிலியை மணமகளின் கழுத்தில் போட்டுவிட்டு, அம்பாளுக்கு நேரிடையாகத் தானே நகையை சாத்திவிட்ட நிறைவோடு கோயிலைவிட்டு வெளியேறினாள்.
– சரோஜா சகாதேவன் , சென்னை

4. ஹைக்கூ

பெருகியோடும் மழைநீர்
காணாமல் போயின…
காகிதக் கப்பல்கள்!
– மு. முருகேஷ் , வந்தவாசி

5. கேள்வி பதில்

கேள்வி : எது அழகான வாழ்க்கை?

பதில் : மனதின் தேவைகள் கொண்டு தான் சுகமான அழகான வாழ்க்கை அமைகிறது. நல்ல எண்ணங்களோடு சுகமான சூழ்நிலையில் சாதகமான வாழ்க்கை அமைய வேண்டும், பிறரோடு ஒப்பிட்டு வாழாமல் உடையையும், உள்ளத்தையும், எண்ணத்தையும், பார்வையையும், தூய்மையாக வைத்து வாழ்வதே அழகான வாழ்க்கை ஆகும்.
– கவிஞர் அன்புநதி அசோகன் , கோவை

6. நகைச்சுவை

ஆசிரியர் : ரேடியோவை கண்டுபிடுத்தவர் மார்கோணி!

மாணவர் : அப்படியா? எங்க வீட்டிலேயும் ஒரு ரேடியோ காணாம போயிடுச்சு, அதையும் கண்டுபிடிச்சு தரச்சொல்லுங்க சார்…
– மு.பெ. இராமலிங்கம்

7. நூல்நயம்

நூல் : நேபாளம் அழைக்கிறது
ஆசிரியர் : வே. எழிலரசு (94449 30780)

மதிப்புரை :
சுற்றுலா செல்வதென்பது மகிழ்ச்சியான தருணம். வே. எழிலரசு அவர்கள் தன்னுடைய நேபாள சுற்றுலா அனுபவத்தை இந்நூலில் பகிர்கிறார். நேபாளம், அலகாபாத் இன்னும் சில நகரங்களின் கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம், வாழ்க்கைமுறை, இயற்கை சூழல் இவற்றையெல்லாம் நம்மோடு பகிர்ந்து,
நம்மையும் நேபாளத்திற்கு அழைத்துச்செல்கிறார். ஆம், பயணக் கட்டுரையாக இல்லாமல் நாவல் போன்று இருப்பது நூலுக்கு பலம். வாசிப்பவர்களுக்கு வரப்பிரசாதம்.

நூல் வேண்டுவோர் 94449 03558 எண்ணில் தாெடர்புகொண்டு வாங்கிக்கொள்ளலாம்.

8. புதுக்கவிதை

குளத்தில்
தெறிதெறிக்கின்றன
உன் பார்வைகள்
தங்க மீன்களாய்!
– ப. ஜார்ஜ் , சென்னை

7. குட்டிக் கட்டுரை

பழைமைக்கு செல்வோம்
========================

புதுமை புதுமை என புதுமையை விரும்பிய நாம் இன்று பழைமையை போற்றுகிறோம். ஆம், இயற்கையோடு இணைந்து இயல்பாக வாழ்ந்தவரை நமக்கு எந்த‌வித நோய்களும் பாதிப்புகளும் ஏற்படவில்லை. நம் பழைமையையும், பண்பாட்டையும், பழக்கவழக்கங்களையும் மறந்ததே இன்று நாம் அடைந்துகொண்டிருக்கும் அனைத்துவிதமான தீங்கிற்கும் காரணம். எனவே, பழைமையை ஏற்போம்…
பாதுகாப்பாய் வாழ்வோம்.
– கலைமகள் காயத்ரி , கள்ளக்குறிச்சி

10. ஆசிரியப்பா

சத்துள உணவு சமூக விலகல்
சுத்தக் கரங்கள் கவசம் முகத்தில்
ஆறடி விலகு அடங்கேல்
ஆறடிக் குள்ளே அடக்கம் முடிவே.
– டாக்டர் க. குப்பாச்சாரி , சென்னை

* * *
புலன வார இதழுக்கு படைப்புகளை
98405 27782 எண்கொண்ட புலனத்தில் அனுப்பலாம்.
* * *
‘ இலக்கியச்சோலை ‘ திங்களிதழுக்கு படைப்புகளை அனுப்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பலாம் :

ஆசிரியர்
இலக்கியச்சோலை – திங்களிதழ்
22/2, சின்னையா நியூ காலனி, 2வது மெயின் ரோடு, பெரம்பூர், சென்னை – 600 011.
elakkiyacholai@gmail.com

News

Read Previous

கொரோனா

Read Next

தற்சார்பு வாழ்வியலுக்குத் திரும்புவோம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *