புதிய ஆசிரியன் வாசகருடன் ஓர் உரையாடல்

Vinkmag ad

புதிய ஆசிரியன் வாசகருடன் ஓர் உரையாடல்
ஆசிரியர் : எப்படி இருக்கீங்க?
வாசகர் : நான் நல்லாத்தான் இருக்கேன். நீங்க யாரு? என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்தீங்க?
ஆ : இந்த புதிய ஆசிரியன்னு ஒரு பத்திரிகை வருதில்ல..?

வா : ஆமா வருது.. அதுக்கென்ன இப்ப?
ஆ : அதோட ஆசிரியர் நான்தான். வா : அப்படியா? ரொம்ப சந்தோஷம்…
ஆ : நீங்க புதிய ஆசிரியன் வாங்கறீங்க…ரெகுலரா படிக்கிறீங்களா?
வா : ரெகுலராப் படிக்க மாட்டேன்.. அப்பப்ப சில பக்கங்களைப் படிப்பேன். ஆனா வீட்டிலே படிச்சுடுவாங்க..
ஆ : பரவாயில்லையே? (மனதுக்குள் : அவங்களாவது படிக்கறாங்களே?) சில பக்கங்களைப் படிப்பேன்னு சொன்னீங்க.. 40-வது பக்கத்தைப் படிப்பீங்களா?
வா : அதை அப்படியே தாண்டிப் போயிடுவேன். அதிலே என்ன வெறும் அறிவிப்புகள்தானே இருக்கு?
ஆ : வெறும் அறிவிப்பா? சந்தா விவரம், சந்தா கட்டணும்னா எந்த வங்கிக்கு அனுப்பணும், யார் யார் சந்தா சேத்துக் குடுத்திருக்காங்க.. யார் யார் வளர்ச்சி நிதி குடுத்திருக்காங்க, ஆசிரியர் குழுவின் வேண்டுகோள் எல்லாம் வருமே..
வா : அதெல்லாம் எனக்கு எதுக்குங்க? நம்ம முருகன் வந்து சந்தா கேப்பாரு.. அவரைத் தட்ட முடியாதுங்கறதாலே  குடுத்துருவேன்..
ஆ : உள்ளே என்ன மாதிரி கட்டுரைகள் இருந்தா விரும்பிப் படிப்பீங்க?
வா : எங்க சங்கம் சம்பந்தமா என்ன நியூஸ் இருந்தாலும் படிச்சுருவேன். ஜி.ஓ. ஏதாச்சும் வந்திருக்கான்னு பார்ப்பேன். நீங்கதான் ஜி.ஓ. எதுவும் போடறதில்லையே?
ஆ : ஜி.ஓ. வை நீங்க உங்க சங்கப் பத்திரிகையிலே படிச்சுக்கட்டும்னு விட்டுருவோம். நாட்டு நடப்புகள், கல்விக் கொள்கைகள், மாணவர்களுக்குச் சொல்ல வேண்டிய-அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய-செய்திகள், வகுப்பறையில் உரையாடல்கள், கேள்வி-பதில்கள், ஒரு சிறுகதை, நல்ல சினிமா .. இதெல்லாம் இருக்குமே? வளவளன்னு இல்லாம சுருக்கமாவும் இருக்குமே?
வா : என்னென்னவோ சொல்றீங்க.. இதெல்லாம் படிச்சு என்ன நான் செய்யப் போறேன்?
ஆ : நம்ம கிட்ட ஓட்டு வாங்கிட்டுப் போறாங்க.. அப்புறம் ஏன் நம்மைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேங்கறாங்க.. அரசுப் பள்ளிகளை அரசாங்கம்தானே கவனிக்கணும்? ஏன் சரியா கவனிக்க மாட்டேங்குது.. ஒரு ஜி.ஓ. வாங்க உங்க சங்கம் இந்த அரசாங்கத்தோட ஏன் இவ்வளவு போராட வேண்டியிருக்கு..இதுக்கெல்லாம் பின்னாலே இருக்கற அரசியல் என்னன்னு நீங்க தெரிஞ்சுக்க வேணாமா?
வா ; தெரிஞ்சுக்கணும்தான்..
ஆ : அது மட்டுமில்லே.. மோடி அரசாங்கம் வந்த பிறகு மாநில உரிமைகள்லாம் ஒண்ணொண்ணா ஏன் காணாமப் போயிட்டிருக்கு.. அவங்க கொள்கை என்ன..  எல்லாத்தையும் ஏன் தனியார்கிட்ட குடுத்துடணும்னு அது துடியாத் துடிக்குது.. இந்த முஸ்லிம்கள் மேலே திடீர்னு ஏன் இவ்வளவு வெறுப்பு? தலித்துகள் ஏன் அடி மேலே அடி வாங்கிக்கிட்டே இருக்காங்க? அதையெல்லாம் நீங்க தெரிஞ்சுக்க வேணாமா?
வா ; தெரிஞ்சுக்கணும்தான்..
ஆ : அப்படின்னா புதிய ஆசிரியனை நீங்க மாதாமாதம் ஆழமாப் படிங்க.. நீங்க படிக்கறதோட இல்லாம உங்க நண்பர்கள் கிட்ட சொல்லி அவங்களையும் படிக்கச் சொல்லுங்க..
வா : நீங்க இவ்வளவு தூரம் சொல்றதினாலே படிச்சுப் பார்க்கறேன். எனக்குப் புடிச்சா ஃபிரண்ட்ஸ் கிட்ட குடுத்து படிக்கச் சொல்றேன்..ஆளை விடுங்க சாமி..
ஆ : தொடர்ந்து படிங்க. நிச்சயம் புடிக்கும். அப்ப நான் வரட்டா?

News

Read Previous

சிரிப்பு

Read Next

வேண்டுவது அட்டை அல்ல..மருத்துவம்

Leave a Reply

Your email address will not be published.