சீன மொழியில் திருக்குறள்

Vinkmag ad

 

தஞ்சை: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பள்ளி கல்வி, இளைஞர் நலன் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் வீரமணி  நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது: தமிழ் பல்கலை. மூலம் திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் ஆகியவற்றை சீன மொழியில் மொழிபெயர்க்க  ரூ.77 லட்சத்து 70  ஆயிரம் மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.

திருக்குறள் மொழிபெயர்ப்பு பணி முடிவடைந்து அச்சில் உள்ளது. பாரதியார் பாடல்கள் மொழிபெயர்க்கும் பணி நடை பெற்று வருகிறது. 12வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் துறை சார் அறிவியல் களஞ்சியங்கள் வெளியிட ரூ.4 கோடியும், கல்வெட்டியல் ஆய்வு மற்றும் பயிற்சி மையம் அமைக்க ரூ.6 கோடியே 94 லட்சம் மதிப்பிலும்,  பணிகள் மேற்கொள்ள நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

News

Read Previous

முதுகுளத்தூர் அருகேயுள்ள கிராம இளைஞர் ஐ.ஆர்.எஸ்., பணிக்கு தேர்வு

Read Next

வாழ்வின் வசந்தமே வருக

Leave a Reply

Your email address will not be published.