சரஸ்வதி மஹால் நூலகத்துக்கு சுவடிகள் அளிக்க வேண்டுகோள்

Vinkmag ad

தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்துக்கு சுவடிகளை அளித்து உதவுமாறு மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:

தொலைநோக்கு கொண்ட நம் முன்னோர்கள் அரிய பெரிய இலக்கியங்களையும், பிறவற்றையும் பனை ஓலைகளில் எழுதிச் சுவடிகளாக நமக்குத் தந்தனர். அவை பல்வேறு இடங்களில் முடங்கியுள்ளன.

சுவடிகள் பழுதடைவதற்கு முன்பு சரஸ்வதி மஹால் நூலதத்துக்கு அன்பளிப்பாகக் கொடுத்து உதவினால், அவை மக்களுக்குப் பயன்படும்.

இந்த நூலகத்துக்கு கொடுப்பதன் மூலம் சுவடி தந்தவர்களும், சுவடி எழுதியோரும் அழியாப் புகழைப் பெறுவர். நூலகத்துக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் சுவடிகளில் இதுவரை வெளிவராத நூல் ஏதேனும் இருந்தால், அவை உரிய பதிப்பாசிரியரின் மூலம் பதிப்பிக்கப்பட்டு நூலாகப்படும். அந்த நூல் சரஸ்வதி மஹால் நூலக வெளியீடாக வெளியிடப்படும். அவ்வாறு வெளிவரும் பதிப்பில் சுவடி தந்தவர்களின் பெயர் இடம்பெறுவதுடன், அப்பதிப்பில் 5 பிரதிகளும் வழங்கப்படும். எனவே, நற்பண்பாளர்கள் தங்களிடம் உள்ள சுவடிகளை சரஸ்வதி மஹால் நூலகத்துக்கு தந்து உதவ வேண்டுகிறேன்.

ஆண்டுதோறும் நூலகத்துக்குச் சுவடியை அன்பளிப்பாக அளித்தவர்கள் செப்டம்பர் 24-ஆம் தேதி நடைபெறும் மாமன்னர் இரண்டாம் சரபோஜியின் பிறந்த நாள் விழாவில் கெüரவப்படுத்தப்படுவர்.

News

Read Previous

எண்ணெய் வளத்தையும் தாண்டி வியாபாரத்தில் முன்னேறும் துபை

Read Next

இட நெருக்கடியில் வாரச்சந்தை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *