குடியம் குகை – ஆவணப் படம்

Vinkmag ad

குடியம் குகை – ஆவணப் படம்

வணக்கம்.

  சென்னைக்கு அருகில் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூடியம் குகையின் பாரம்பரியம் பற்றியும் அதன் தொல்-பழங்கால வரலாறு பற்றியும் ஆவணப் பட முயற்ச்சியில் உள்ளேன்.

இதுவரை அதன் இருப்பிடம், பூண்டி தொல்பொருள் அருங்க்காட்சியகம், திரு.T.துளசிராமன் (Rtd Curator, Tamilnadu dept. of Archeology) நேர்காணல், Dr.சாந்தி பப்பு நேர்காணல், சென்னைஅருங்க்காட்சியாகத்தில் உள்ள கைக்கோடரிகள் ஆகியவற்றை HD முறையில் பதிவு செய்யப் பட்டு உள்ளது. இது பற்றி தமிழ் நாடு தொல்பொருள் துறை, ASI, மற்றும் மாநில கல்லூரி Geological Dept ஆகியோரின் உதவியுடன் முடிந்தவரை நம்பகமான தகவல்களை தொகுத்து உள்ளேன்.

இருப்பினும், இது குறித்து மேலான தகவல் தெரிந்தவர்கள் தயவு கூர்ந்து உதவ வேண்டுகிறேன்.

இந்த முயற்சியில் சென்னை ஓவிய கல்லூரியின் முன்னாள் மாணவானாகிய நானும், எனது நண்பர் வசந்தும் (சென்னை திரைப்பட கல்லூரி) சொந்த முயற்சியில் உருவாக்கி கொண்டு இருக்கிறோம். எங்களது அடுத்தகட்ட செலவுகளுக்கு பொது நிதி திரட்ட முடிவு செய்து கீழ்க்கண்ட இணைய தளம் மூலம் முயற்சி செய்து உள்ளோம்.
எனவே, தங்களால் முடிந்த உதவியை செய்தோ அல்லது ஏனைய நண்பர்களுக்கு தெரிய
ப் படுத்தியோ, இந்த முயற்சி முழுமை அடைய உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஆவணப் பட Trailer :  https://youtu.be/YJ4gyQhnyec61
அன்புடன்,
ரமேஷ்,M.F.A.

News

Read Previous

மாற்றத்தின் தூதர்கள்

Read Next

சே குவேரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *