காரைக்குடி கம்பன் கழகத்தின் வேண்டுகோள்

Vinkmag ad

கம்பன் கழகம்

காரைக்குடி

அன்புடையீர்

வணக்கம்

தங்களின்  நலன் அறிய ஆவல். காரைக்குடி கம்பன் கழகம் தொடர்ந்து தமிழ்த் தொண்டர்களை இணைய வழியில் அறிமுகம் செய்து வருவதைத் தாங்கள் அறிவீர்கள்.காரைக்குடி கம்பன் கழக வலைப்பூவிலும், முகநூலிலும், கட்செவியிலும் உலகத் தமிழர்களுக்கு இவ்வறிமுகம் சென்று சேர்ந்து வருகிறது.

2021 ஆம் புத்தாண்டின் முதல்வாரம் முழுவதும் அயலகத்தில் தமிழ்த்தொண்டாற்றி வரும் தமிழ்த் தொண்டர்களை இணைய வழியில் அறிமுகம் செய்ய காரைக்குடி கம்பன் கழகம் விரும்புகிறது.

தாங்கள் தங்கள் நாட்டில் தொடக்கம் முதல் தற்காலம்வரை தமிழ்த் தொண்டாற்றிவரும் தமிழ்த் தொண்டர்கள், தமிழ்க்கல்வி வளர்க்கும் அமைப்புகள், தமிழ் இலக்கிய அமைப்புகள் பற்றி  அரை மணி நேரத்திற்குக் குறையாமல் காணொலியாக பதிவு செய்து எங்களுக்கு அனுப்பி வைக்க அன்புடன் வேண்டுகிறோம்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாட்டினரின் தமிழ்த் தொண்டுகளை அறிமுகம் செய்திட விரும்புகிறோம். தங்களின் காணொளி டிசம்பர் 25 ஆம் தேதிக்குள் வந்து சேர்ந்திடின் மிக்க மகிழ்வடைவோம். அதன்பிறகு நாள் குறித்து அழைப்பு தயார் செய்து அனுப்பி வைக்கிறோம்.

இதற்காக பல நாடுகளில் இருந்துத் தமிழன்பர்களைத் தொடர்பு கொண்டுள்ளோம்.

அன்பும் பணிவுமுள்ள

கம்பன் கழகத்தார் காரைக்குடி

காண்க. http://kambankazhagamkaraikudi.blogspot.com/

News

Read Previous

அருந்தமிழும் அன்றாட வழக்கும்

Read Next

ஃபஹீமிய்யா பப்ளிஷர்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *