காகித பூங்கா அமைப்போம்

Vinkmag ad
வல்ல நாயனின் திருப்பெயர் போற்றீ
 
 
காகித பூங்கா அமைப்போம் மண்ணரைக்கு பூக்கள் தர
அன்பிற்கினிய இஸ்லாமிய உடன்பிறப்புகளே,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சில தினங்களுக்கு முன்னால் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக ஒரு ஊர் சென்றிருந்தேன். இஸ்லாமியர்கள் பெருவாரியாக வாழ்கிற ஊர்களில் அதுவும்
ஒன்றும். வழமை போல அழைப்பிதழிலிருந்து சில மணி நேரங்கள் திருமணம் தாமதம். சரி மஸ்ஜிதில் இருக்கும் நேரத்தை நல்ல வகையாக
கழிக்கலாமே என எண்ணி எதாவது நூல்கள் இருக்கிறதா என்று பள்ளியைசுற்றி வர ஆரம்பித்தேன். அல்லாஹ் அக்பர் அங்கு இருந்த சில வகை
சவூதியிலே இலவசமாக தரப்பட்ட குர் ஆன்கள் , இன்னும் சில இந்திய குர் ஆன்களும் (மிக பழைய நிலையில் ), தன்னை தொட்டே பல வருடங்கள்
ஆகுகின்றன என்பதை தன் மீதிருந்த ஒட்டடையாலும், அழுக்குகளாலும் சொல்லிக்கொண்டிருந்தது.
உலகில் உள்ள அழுக்கு எண்ணங்களையும், மனித இதய அழுக்குகளை நீக்க வந்த உலகப்பொதுமறையில் நிலை அது.
இன்றிலிருந்து எந்த பள்ளிவாசலுக்கு சென்றாலும் அங்கிருக்கும் ஒரு சில குர்ஆன்களை  எடுத்து அதன் தூசுகளை துடைத்துவிட்டு வைத்துவரலாம்
என்று உறுதி பூணவைத்தது.
அதோடு முடிந்துவிட்டதா என்றால் இல்லை.
முழு மஸ்ஜிதையும் சுற்றி முடிந்தாகிவிட்டது. ஆனால் , ஒரு இஸ்லாமிய நூலைக்கூட அங்கு காண முடியவில்லை.
இன்றைய இஸ்லாமிய பல்கலைகழகங்களின் நிலை இது.
அதுவும் இஸ்லாமியர்கள் பெருவாரியாக செலவ சீமான்களாக வாழும் ஊர் அது.
இந்த மஸ்ஜிதுகள் நபியவர்களின் காலத்தில் அறிவின் கேந்திரங்களாக திகழ்ந்தன.
இன்னும் வாசிப்பே சுவாசிப்பு என்ற மூலமந்திரத்தோடு திருமறையின் முதல் வசனம் சொல்லித்தர,
அதை தன் புறமுதுகுப்பு பின் காடாசியவர்களாய் இந்த சமுதாயம்.
இஸ்லாமிய உம்மாவின் இடைகால வரலாறு நமக்கு சொல்லித்தருகிற பாடம்.. இஸ்லாத்தை வெற்றி கொள்ள / வேறருக்க புறப்பட்ட கூட்டத்தினர்
பெற்று சென்றதென்னவோ அறிவுக்கருவூலங்களான புத்தகங்களைத்தான்.
சிலர் எடுத்துச்சென்றனர், சில ஆற்றைக்கடக்க பாலங்களாகினார்கள், இவை இருந்தால் மீண்டும் எழுந்து விடும் இந்த சமூகம் என்று தீயிட்டு
 கொழுத்தினர் சிலர்.
அந்த இஸ்லாம் குறித்தான இஸ்லாமிய நூலகளின் நிலைதான் மேலே சொன்னது.
கடல்கடந்து பொருளீட்டச்சென்றிருக்கும் என் இஸ்லாமிய சகோதரனே.
தயவு கூர்ந்து உங்கள் ஊர்களின் சில இஸ்லாமிய புத்தகங்களை வாங்கி மஸ்ஜிதுகளில் வையுங்கள்.
வருகிற ஒருவர் ஒரு செய்தியை படித்து அதை செயல்படுத்தினாலும் ஈடுஇணையில்லா நற்கூலி பெறுவீர்கள் உங்கள் ரப்பிடம்.
உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் அவர்களின் காட்டிய வழிக்கு உரித்தாக்குவோம் நாம் கப்ருடைய வாழ்வை.
நம் கட்டிய அழகு கோட்டைகளும், சொகுசு வாகனங்களும், C மதிப்பில் இருக்கிற நம் வங்கிக்கணக்குகளாலும் நம் கப்ருக்கு வளங்களை சேர்க்காது.
மாறாக, பெருமானார் பேசுவார்கள்:
ஒருவன் மரணித்த பின்னால் அவனின் எல்லா செயல்களும் அவனிடமிருந்து துண்டிக்கப்பட்டுவிடும்.. ஆனால் அவனின் மூன்று செயல்கள் அவனின்
மண்ணறைக்கு வந்து கொண்டே இருக்கும்.
1. சதக்கா ஜாரியா (நிலையான தருமம் – அதிலிருந்து தொடராக பயன்பெறப்படுமே அது)
2. பயன் தரும் கல்வி
நீங்கள் மேல செய்த செயல் இவை இரண்டிலும் அடக்கம்.
நீங்கள் வாங்கி வைக்கும் ஒரு புத்தகம் உங்கள் மண்ணறைக்கு தொடர்ந்து பூத்துக்குலுங்கும் பூக்களை அனுப்பும் என்றால். ஏன் இன்னும் தயக்கம்.
3. தன் பெற்றோருக்கு து ஆ செய்யும் நல்ல குழந்தை.
நாம் அப்படி வாங்கி வைத்தாலும் நம்மூர் பள்ளிவாசலில் வருவோர் போவோர் எடுத்து சென்று விடுவார்களே என்ற நீங்கள் கேட்கும் கேள்வி காதில்
விழுத்தான் செய்கிறது.
என்ன செய்வது சில நேரம் அப்படியும் நடந்துவிடலாம். ஆனால் எல்லா நேரமும் அப்படியே இருக்காது.
புத்தகத்தை வாங்கி அதன் உள் பகுதியில்
“ இது வக்பு செய்யப்பட்ட பொருள் இதை யாராவது திருடிச்சென்றால் கணக்கு தீர்க்கப்படும் கியாமத் அன்று என்று எழுதி வைத்துவிட வேண்டியது
 தான்”
இதற்கு மேலும் சொறணை இல்லாத ஜென்மம் என்றால்  நாம்மால் என்ன செய்ய முடியும். (நம் வீட்டில் வைத்திருந்தாலும் ஆட்டையை
போட்டுவிடுவார்கள் )
ஆனால்…. நாம் வைக்கும் எண்ணத்திற்கு கண்டிப்பாக கூலி உண்டு என்பது மட்டும் உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உண்மை.
நல்ல எண்ணத்தோடு அதற்கு தக்க கூலி உண்டு என்ற எதிர்பார்ப்போடு நாமும் செய்வோம், நண்பர்களை செய்யத்தூண்டுவோம். ஒரே ஊராக
இருந்தால் கூட்டாக சேர்ந்து மாதம் இரண்டு மூன்று என்று சேர்த்தாலே ஒரு நூலகம் ஆகிவிடும்.
நல்ல செயல்களில், சிந்தைகளில் கூட்டாகிற நிலையை இறைவன் தருவானாக. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
– ஹஸனீ

News

Read Previous

இமைகளே … திறவுங்கள் !

Read Next

சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்குதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *