கணினியில் தமிழ் தட்டச்சு

Vinkmag ad

கணினியில் ஆய்வுப்பெருக்கம் உருவாக யூனிகோட் குறியேற்றமும், அதனைத் துணைக்கொண்டு செய்யும்

இயற்கை மொழி ஆய்வுகளும் வழிவகுக்கின்றன. சென்ற வாரம் வல்லமையாளராக இண்பிட் தலைவர்
வாசு தெரிவுசெய்யப்பட்டார். அவர் வழியில் இன்னும் ஏராளமான NLP (Natural Language Processing) ஒருங்குகுறியில்
செய்ய கணிமுனைவர்கள் முயற்சி எடுத்தால் தமிழ் வளர்ச்சி கிட்டும். சில ஆயிரம் தமிழ்நூல்களே
இணையத்தில் கிட்டும் நிலை. இன்னும் 10 ஆயிரம், 1 லட்சம் தமிழ் நூல்கள் (19, 20-ஆம் நூற்றாண்டுகளில்
அச்சானவை) இணையத்தில் கிட்டும்படி செய்தல்வேண்டும். முதலில் பிடிஎப், அதன் தொடர்ச்சியாக
வெள்ளுரையாக யுனிகோட் என்று தட்டச்சினால் சிந்துவெளி ஆய்வு, தொல்த்ராவிட தாதுவேரியல்,
தமிழ் ப்ராமி உருவாக்கம், தொல்காப்பியத்தின் பல நூற்றாண்டு லேயர்கள், தென்னிந்திய சமூக, சமயவியல்
ஆராய்ச்சிகள் என்று பெருக வாய்ப்புகள் உள்ளன.
இன்று தமிழ் ஹிண்டுவில் புதிய நூன்முகங் கண்டேன். யூனிகோட் தட்டச்சு முறை, இணையத்தில்
பேராசிரியர்கள் எழுதல், தமிழ்நாட்டின் முனைவர்கள் முன்னெடுத்தால் கோடிக்கணக்கான தமிழர்கள்
விஞ்ஞானபூர்வமாக எழுதத் தொடங்குவர் எனலாம்.
நா. கணேசன்

கணினியில் தமிழ் தட்டச்சு

Do It Yourself Pest Control – Don’t Do-It-Yourself. Trust The Orkin Man to Help Remove Pestswww.orkin.com
COMMENT   ·   PRINT   ·   T+

அச்சுப்பணி, தகவல் தொழில்நுட்பம் என்னும் இரண்டுக்கும் உதவும் கணினி, அலைபேசி, இணையம் எனப் பல ஊடகங்களிலும் செயல்படும் முக்கியக் கருவியான தமிழ் மென்பொருள்கள் குறித்த பல கருத்துகளை விளக்கு வதாக இந்நூல் உருவாக்கப் பட்டுள்ளது.

இந்நூல் மூன்று இயல் களைக் கொண்டுள்ளது. தமிழ் மென்பொருள்களுக்கு அடிப்படையான எழுத்துரு (Font), குறியீட்டாக்கம் (Enco ding), விசைப் பலகை (Keyboard) குறித்தும் இம்மூன்று அடிப் படைக் கூறுகளுக்கான ஒருங் குறி (Unicode) பங்களிப்பு குறித் தும் விரிவான பல கருத்துகள் ஆராயப்பட்டுள்ளன.

கணினியைத் தமிழில் இயங்கவைக்கும் தமிழ் மென் பொருள்களின் அவசியம், உரு வாக்கம், பயன்பாடு குறித்து விரிவான செய்திகள் தரப்பட் டுள்ளன. இந்நூல் தமிழ் மொழி வளர்ச்சியில் தமிழ் மென் பொருள்களின் பங்களிப்பை விளக்குகிறது.

தமிழ் மென்பொருள்கள் குறித்து எளிய நடையில் அனை வருக்கும் விளங்கும் வகை யில் இந்நூல் உருவாக்கப்பட் டுள்ளது. இந்நூலின் வழி பல்வேறு எழுத்துரு (Font) உருவாக்கங்களால் ஏற்படும் சிக்கல்களை அறிய முடிகிறது. தமிழ் பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில் உருவாகியுள்ள பல்வேறு மென்பொருள்கள் குறித்தும் அவற்றின் உருவாக் கத்தில் ஏற்படும் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது, அவற்றை மேம்படுத்துவது குறித்துமான பல விரிவான கருத்துகளை இந்நூல் ஆராய்ந் துள்ளது.

தமிழ் மென்பொருள்கள்

முனைவர் இரா. பன்னிருகைவடிவேலன்

வெளியீடு: நோக்கு, 259 நேரு நகர், 2-வது முதன்மைச் சாலை

சென்னை-96 கைபேசி: 9380626448

விலை: ரூ.125

News

Read Previous

ரமலான் வாழ்த்துக்கள்

Read Next

பிறை சொன்ன சேதி என்ன?

Leave a Reply

Your email address will not be published.