ஒரே பெருநாள்

Vinkmag ad

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

அல்லாஹ்வின் கிருபையால் ரமலானை அடைந்து முடிவடையும் தருணத்தில் இருக்கிறோம். அல்லாஹ் நமது அமல்களை அங்கீகரித்து ஏற்றுக் கொள்வானாக.

வழமை போல் இந்த வருடமும் 3 பெருநாட்களை சந்திக்கும் நிலையில் இருக்கிறோம். ஒரே வீட்டில் இரண்டு அல்லது மூன்று பெருநாள்கள் இருக்கும். ஆனால் மகிழ்ச்சி மறைந்திருக்கும். பெருநாள் என்பது சந்தோசமான தினம் என்ற நிலைமை மாறி ஒருவருக்கொருவர் சந்தேகம் கொள்ளும் தினமாக மாறி வருகிறது.

உறவினர்கள் சந்திப்பு, உற்சாகமான கலந்துரையாடல் மறைந்து யாரைப் பார்த்தாலும் நீங்கள் என்று பெருநாள் கொண்டாடினீர்கள் என கேட்கும் துயரம்.

இதனை மாற்றுவதற்கு அனைவரும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடும் நிலையை உருவாக்க வேண்டும். தான் என்ற எண்ணத்தினை மட்டும் சற்று மாற்றினால் போதும்.

தற்போது ஹிஜ்ரா கமிட்டி, சவுதி பிறை, தமிழகப் பிறை என பின்பற்றப்படுகிறது. நோன்பு வைப்பது அவரவர் பிறைப் படி வைத்துக் கொள்ளலாம். ஆனால் பெருநாள் என வரும்போது ஒரே நாளில் கொண்டாட முடிவு செய்யலாம். பெரும்பாலும் கடைசிப் பெருநாளாக வருவது தமிழகப் பிறையின் அடிப்படையில்தான். எனவே அன்றைய தினம் பெருநாள் கொண்டாடுவதற்கு வசதியாக மற்ற இரு சாராரும் தங்களது பெருநாள் தினத்தில் நோன்பு வைக்காமல் இருந்துவிட்டு அனைவரும் சேர்ந்து பெருநாள் கொண்டாடலாம்.

பெருநாள் தொழுகை என்பது அனைவரும் ஒன்று சேர்ந்து செய்யும் ஒரு சுன்னத்தான செயல். எனவே இதனுடைய கருத்தை உணர்ந்து, கடுமையைக் காட்டாமல் அனைவரும் ஒன்றாக கொண்டாடுவோம்.

அல்லாஹ் நமது உள்ளங்களை ஒன்றிணைப்பானாக….

reliablerashid@gmail.com

 

News

Read Previous

ஜகாத்

Read Next

இலவசம்!!

Leave a Reply

Your email address will not be published.