ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்

Vinkmag ad

ஏ.ஆா்.தாஹாவின்
சிந்தனை அரும்புகள்
————————————————————–
நமது ஜகாத் ஸதக்கா பணங்கள்….?
————————————————————–
கண்ணியமிக்க இந்த புண்ணிய
ரமளானில் நாம் தாராளமாக நமது
ஜகாத் மற்றும் ஸதக்கா பணங்களை
ஏழை எளிய மக்களுக்கு அள்ளித் தரும்
நேரமிது. ஆனால் அதை நாம் யாருக்குக்
கொடுக்கனும்,யாருக்குக் கொடுக்கிறோம்
என்பதில் மிகவும் கவனம் செலுத்தனும்.

உறவுகளில் வறுமையின் கோரப்
பிடியில் சிக்கித் தவிப்போா் பலர் இருக்
கிறர்.வசதி வாய்ப்பின்றி பல ஆண்டு
களாய் குமர்களாய் திருமணத்திற்கு காத்திருக்கும் நமது குடும்பப் பெண்கள்.
உடன் பிறந்த சகோதர சகோதரிகளின்
மக்கள் பணமின்றி, உயர் கல்விக்குச்
செல்ல முடியாமல் வழியின்றி தவிப்பது
ஒரு புறம்.தன் குடும்பத்தை சேர்ந்தவர்
களில் நோயால் அவதிப் பட்டு சிகிச்சை
செய்ய வழியின்றி கஷ்டப்படுவோா் பலர். இப்படிப் பட்டவர்களுக்கு உதவாமல், பெருமைக்கு, பிறரின் பாராட்டுக்கு
அள்ளிக் கொடுப்பதில் என்ன புண்ணியம் இருக்க முடியும்.

குடும்பத்துக்கு கொடுத்து என்ன
செய்ய…..?நம் பெயர் வெளி வரவா
போகிறது என்ற நினைப்பு உள்ளவர்கள் வேண்டுமானால், விளம்பரத்தைத் தேடி தாராளமாக வெளியில் அள்ளிக் கொடுக்
கட்டும். ஆனால் அன்னவர்களின் பெயர்
கள் அல்லாஹ்வின் நன்மை பட்டியலில்
இருக்காது என்பதை மட்டும் உறுதியாகப்
புரிந்து கொள்ளட்டும்.

உங்களுடைய ஜகாத் ஸதக்காக்களை
எங்கள் பைத்துல்மாலுக்கு, கல்விச் சங்கங்களுக்கு, பொது அமைப்புகளுக்கு
அள்ளித் தாருங்கள், நாங்கள் சிறந்த
பணியாற்றி வருகிறோம் என்று கேட்போா்
ஒரு புறமிருக்கட்டும். அப்படி மக்கள் தரும்
நிதிகள் முறையாக செலவழிக்கப்படு
கிறதா….? என்பதில்., அந்தந்த நிர்வாகி
கள் அல்லாஹ்வை அஞ்சட்டும். அவை
களில் மக்கள் பணியை சிறப்பாக சில
அமைப்புகள், பைத்துல்மால்கள் ஆற்றி
வருவதை நாம் மறுப்பதற்கில்லை

யாருக்காகவும், யாருடைய தனிப்பட்ட
பரிந்துரைக்காகவும், யாரையும் சந்தோ
ஷப் படுத்தனும் என்பதற்காகவும் அல்லா
மல், உண்மையிலேயே உதவி வாங்க
தகுதியானவர்களை இனங் கண்டு உதவினால்தான்… இந்த பொது சமுதாய அமைப்புகள் உண்மையான, உறுதியான அமைப்பாக மக்கள் மன்றத்தில் எடுபடும்.

அதல்லாமல் பரந்த மனப்பான்மை
யற்ற, பிறருக்கு உதவும் எண்ணமற்ற,
தன் கைப் பொருள் செலவழிக்க தயங்கு
கின்ற, ஏழை எளியவர்களை கனிவோடு
நேசிக்கும் குணமற்ற, தனது பெயரை
விளம்பரப்படுத்த விரும்புகின்ற,அதிகார, ஆணவ எண்ணங் கொண்ட, உதவித் தேடி வருபவர்களை இப்போ வா, அப்போ வா
என்று, ஏதோ தன் கையில் இருந்து பணம்
கொடுப்பது போன்று இழுத்தடிக்கின்ற
இவர்களைப் போன்றவர்கள், சமூக அமைப்புகளில், முக்கிய பொறுப்பில் இருந்தால், அந்த அமைப்பு முறையாக
செயல்பட முடியாது என்பது நிச்சயம்.
அப்படிப் பட்டவர்கள் களை எடுக்கப்பட
வேண்டும்.ஆகவே உங்களிடம் ஒப்படைக் கப்பட்ட அமானித நிதிகளை முறையாக
பயன் படுத்துங்கள்.

ஜகாத் ஸதக்கா கொடுக்கும் அருமை
சகோதர சகோதரிகளே…..

உங்கள் கண் முன்னே எத்தனையோ
வாய் திறந்து கேட்க வெட்கப்படும்
மவுன மிஸ்கீன்கள் இருக்கிறார்கள்.
குமர்களைகளை வைத்துக் கொண்டு கண்ணீர் வடிக்கிறார்கள். தன் மகனை
உயர் கல்விக்கு அனுப்ப வழியின்றி
விழி பிதுங்கி கிடக்கின்றனர். உண்ண
உணவின்றி தவிக்கிறார்கள்.கணவனை
இழந்து விட்டு, வருவாய் இன்றி மிகவும்
சிரமத்தில் காலத்தைக் கடத்துகிறர்.அவர்
களை இனங்கண்டு, நீங்களே அவர்
களை நேரில் தேடிச் சென்று உதவுங்கள்.
இதுதான் பெருமானார் (ஸல்) அவர்கள்
உவக்கும் செயலாகும். பெருமைக்காக,
பிறர் தன்னை பாராட்ட வேண்டும்
என்பதற்காக கொடுப்பதில் எந்த ஒரு நன்மையுமில்லை.

உங்கள் செல்வத்தில் இரண்டரை
சதம் ஏழைகளுக்குரியது என்பது
எப்போதும் ஞாபகத்தில் இருக்கட்டும்.
இதில் என்னவோ நீங்கள் உங்கள் கையில்
இருந்து கொடுப்பது போன்று பெருமை கொள்வதற்கு எதுவுமில்லை. நீங்கள்
இந்த உலகிற்கு வரும்போது எதையும் கொண்டு வந்தவர்கள் அல்ல. எல்லாம்
வல்ல ரஹ்மான் அல்லாஹ் தந்தது
என்பது ஞாபகத்தில் இருக்கட்டும்.

சில வீடுகளில் பார்க்கிறோம். வீடு
தேடி வந்து நிற்கும் ஏழைகளிடம், நாங்க
இப்போ கொடுக்கவில்லை. பிறை 22
வாக்கில் வாங்கோ என்று சொல்லி அவர்
களை திருப்பி அனுப்பும் காட்சிகளைப்
பார்க்கிறோம். மனது வலிக்கிறது.
காரணம் உண்மையில் நம்மிடம்
பணம் இல்லாமலிருந்து அவர்களை
திரும்ப வரச் சொல்வதில் தப்பில்லை.

ஆனால் கொடுக்க மாய்ச்சல்பட்டு
அவர்களை திரும்ப வரச் சொல்வது
மனிதாபிமானமற்ற செயல். ரமளானில்
அவர்கள் பல வீடுகளுக்கும் உதவி கேட்டு
செல்லக் கூடியவர்கள். நம் ஒரு வீட்டிற்கே திரும்பத் திரும்ப வரச் செய்யாதீர்கள்.
உங்களால் முடிந்ததை அன்றே கொடுத்து
விடுங்கள். அதுதான் சிறந்தது. வல்ல
ரஹ்மான் கண்ணியம் நிறைந்த இந்த
புண்ணிய ரமளானின் பொருட்டால்
நம் அனைவருக்கும் எல்லா நலமும்
வளமும் வழங்கிடுவானாக. உங்களின்
மேலான துஆவில் இந்த அடியேனையும்
ஞாபகத்தில் வையுங்கள்.

ஏ.ஆா்.தாஹா(ART)05-06-2018

News

Read Previous

பாலியல் குற்றச்சாட்டில் 2018 நோபல் விருது!

Read Next

புற்றுநோய் மரணங்களுக்கு காரணம்தான் என்ன?

Leave a Reply

Your email address will not be published.