அறிந்த அறிவியலும் அறியாத புதிர்களும்

Vinkmag ad
Arinda Arivialஅறிந்த அறிவியலும் அறியாத புதிர்களும்
பேரா.கே.ராஜு

மதுரை திருமாறன் வெளியீட்டகம், தி.நகர். – சென்னை- 17 அலைபேசி : 70109 84247
அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கும், பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக் கும் மட்டுமேயானதல்ல. அனைத்து மக்களுக்கும் ஆனது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளவர் பேராசிரியர் ராஜு. இதனை செயல் படுத்தும் முகத்தான் தீக்கதிர் நாளிதழில் வாரந்தோறும் எளிய நடையில் அறிவியல் கட்டுரைகளை எழுதிவருகிறார். சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது அவரது கட்டுரைகளின் வெற்றியாகும். அவரின் அறிவியல் கட்டுரைகளின் ஆறாவது தொகுப்பு அறிந்த அறிவியலும் அறியாத புதிர்களும் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. முப்பதாண்டு காலம் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றிய அனுபவம் அவருக்குக் கைகொடுக்கிறது. நம் கைகளைப் பிடித்து இழுத்து வந்து அறிவியல் பாடம் புகட்டுகிறார் ராஜு. அறிவியலைப் பாடமாகப் படித்தால் மட்டும் போதாது. அறிவியல் மனப்பான்மையை வளர்த்திட வேண்டும். வாழ்வியல் பிரச்சனைகள் அனைத்திற்கும் அறிவியல் பூர்வமான தீர்வு காண வேண்டும். ராஜுவின் புத்தகங்கள் அறிவியல் உண்மைகளை சுவராசியமாகச் சொல்லிச் செல்லுகின்றன. நூலின் அணிந்துரையில் தமிழ் இந்து நாளிதழின் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ், இவை வெறுமனே படிக்க மட்டுமேயான கட்டுரைகள் அல்ல. இவற்றை நாம் கடைப்பிடிக்கவும், மற்றவர்களுக்கு பரப்புரை செய்யவும் கூடிய பயனுள்ள அறிவியல் செய்திகள் அடங்கிய நூலாக இந்நூல் கவனம் பெறுகிறது என்கிறார்.  ஐம்பத்திரெண்டு தலைப்புகளில் விளக்கப் படங்களுடன் கட்டுரைகள் அமைந்துள்ளன. விளக்கப் படங்கள் வாசிப்பை எளிய, இனிய அனுபவமாக மாற்றுகின்றன.  இப்புத்தகங்கள் அனைத்தும் அனைவருக்கும் உகந்தவை. அதிலும் குறிப்பாக மாணவர் சமுதாயம் படித்துப் பயனடைய வேண்டியவை.

பேரா. பெ. விஜயகுமார்

News

Read Previous

நினைக்க நினைக்க…

Read Next

இஸ்லாமியச் சட்டத்தின் வளமும் விசாலமும்

Leave a Reply

Your email address will not be published.