அறிந்த அறிவியலும் அறியாத புதிர்களும்

Vinkmag ad

அறிந்த அறிவியலும் அறியாத புதிர்களும்(கட்டுரைகள்)

ஆசிரியர் : பேரா.கே.ராஜு

வெளியீடு: மதுரை திருமாறன் வெளியீட்டகம், பழைய எண் 35, புதிய எண் 21,

சாதுல்லா தெரு, தி.நகர், சென்னை – 600 017

அலைபேசி : 7871780923…..பக்கம் – 166 ; விலை – 120

ப.முருகன்

அறிந்திட வேண்டிய அறிவியல் விசயங்கள்

நம்மைச் சுற்றி இருப்பவை பற்றியும் நம்மைச் சுற்றி நடப்பவை பற்றியும் அறிந்து கொள்ளும் ஆர்வம் மனிதர்களுக்குஇயல்பாகவே உண்டு. ஆனாலும் எல்லாவற்றையும் நம்மால் அறிந்து கொள்ள முடிவதுமில்லை. எல்லாவற்றையும்நாமும் அறிந்து கொள்ள முயல்வதுமில்லை. சில நேரங்களில் அறிய விரும்புகின்றவற்றை பற்றிக் கூட அறிந்துகொள்ள முடியாத சூழல் அமைந்துவிடும். ஏனெனில் உலகம் பரந்தது. அதிலும் அறிவியல் உலகம் மிக மிகப் பரந்தது.அந்த அகண்ட வெளியில் நாம் அறிந்திருப்பவை ரொம்ப ரொம்பக் குறைவே. அறியாதவை நிறைய நிறைய அதிகம்.அறிந்தது சிறுஅளவு; அறியாதது அண்ட அளவு.அறிதொறும் அறிதொறும் அறியாமை அகன்றுவிடுவதில்லை;அகண்டு கொண்டேயிருக்கிறது. என்றாலும் ஒரு சில அறிஞர்கள் தாங்கள் அறிந்தவைகளை பிறர் அறியவேண்டியவைகளை எடுத்துச் சொல்வதை தொடர்ந்து செய்து கொண்டேயிருக்கிறார்கள். அத்தகைய அறிவியல்வித்தகர்களில் ஒருவரான பேராசிரியர் கே.ராஜு அவர்கள் வாரா வாரம் ஏதாவது ஒரு விஷயம் பற்றி தீக்கதிர்நாளிதழில் அறிவியல் கதிர் பகுதியில் எடுத்துரைத்துக் கொண்டே, எழுதியுணர்த்திக் கொண்டேயிருக்கிறார்.பன்னிரண்டு ஆண்டுகளாக ஒரு மனிதர் தொடர்ந்து எழுதிக்கொண்டேயிருப்பது பெரும்சாதனை. அந்தச் சாதனைக்குஅவருக்கு நமது பாராட்டுக்கள்.நாட்டு நடப்புகள் பற்றியும் அறிவியல் உலகில் அவ்வப்போது நிகழ்வது பற்றியும்தமிழ்கூறும் நல்லுலகுக்கு தெரிவிக்கும் வண்ணம் எளிமையாகவும் தெளிவாகவும் எழுதுவது அரிது.

தமிழ்நாட்டில் மார்க்சிய நோக்கில் அறிவியல் விஷயங்கள் பற்றி சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் விதத்தில்முதன்முதலில் எழுதத் துவங்கியவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர். அவர் தனது கட்டுரைகளில் தத்துவவிளக்கமும் அளித்திருப்பார். பேரா.ராஜூ அவர்கள் பெருங்கட்டுரைகளாக இல்லாமல் சிறுசிறு குறிப்புகளாகவும்நிறைய எழுதியிருக்கிறார். அவற்றை நன்றாகப் புரிந்து கொள்வதற்காக அதற்குரிய படங்களையும்கொடுத்திருக்கிறார்.அவ்வாறு எழுதப்பட்ட விஷயங்கள் 52ஐ தொகுத்து ‘அறிந்த அறிவியலும் அறியாத புதிர்களும்’என்ற பெயரில் ஆறாவது நூலாக வெளியிட்டிருக்கிறார். இயற்கை பேரிடர்களிலிருந்து பாடம் கற்கிறோமோ? எனத்துவங்கி பருவநிலை மாற்றம் குறித்த பாரீஸ் மாநாடு முடிய அனைத்துக் கட்டுரைகளும் அரிய தகவல்கள்கொண்டவை. உணவு, விவசாயம், உயிர்கள், பயிர்கள், தொழில்நுட்பம், மருத்துவம், அறிவியல் விழிப்புணர்வு,போலி அறிவியல், எல்இடி விளக்குகள், கார்பன் வெளியேற்றம், மழைநீர் சேகரிப்பு, நியூட்ரினோ ஆய்வு மையம்,வைட்டமின் சி… என பலப்பல உள்ளன. இந்த கட்டுரைகளை வரிசையாகப் படிக்க வேண்டும் என்ற அவசியம்இல்லை. எதை வேண்டுமானாலும் படிக்கலாம். பிடித்த கட்டுரை, பிடிக்காத கட்டுரை என்ற பிரச்சனை எழாது.ஏனென்றால் எல்லா கட்டுரையும் உங்களுக்கு பிடித்தமானதாகவே இருக்கும்.. படித்தால். “இவை வெறுமனே படிக்கமட்டுமேயான அறிவியல் கட்டுரைகள் அல்ல; சிலவற்றை கடைப்பிடிப்பதோடு மற்றவர்களுக்கு பரப்புரைசெய்யவும் கூடிய பயனுள்ளவை” என்று அணிந்துரை வழங்கியுள்ள கவிஞர் மு.முருகேஷ் கூறியுள்ளது மிகவும்பொருத்தமானதே. புத்தகத்தின் அட்டை, வடிவமைப்பு அருமை.மூடநம்பிக்கைகளும் புராணக் கதைகளும்அறிவியல்தான் என பேசப்படுகிற காலத்தில் இத்தகைய அறிவியல் நூல்களை வெளியிடும் பதிப்பாளர் நேருவுக்குபாராட்டுக்கள்.

 

News

Read Previous

ஆதலால் காதல் செய்வீர்..

Read Next

வலியவனுக்கு வட்டலப்பம், இளைத்தவனுக்கு புளிச்சேப்பமா?

Leave a Reply

Your email address will not be published.