துாங்காமல் பணியாற்றும் அதிகாரிகள் இருப்பது ராமநாதபுரத்தில்…!!

Vinkmag ad

துாங்கா நகரம் மதுரை!
துாங்காமல் பணியாற்றும் அதிகாரிகள் இருப்பது ராமநாதபுரத்தில்…!!

மன்னனுக்கு ஏற்ற தளபதியான மாற்றுத்திறனாளி நல அலுவலர்

நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெடரேஷன் தேசிய தலைவர் டாக்டர் அப்துல் ரசாக் பாராட்டு
இராமநாதபுரம்:
துாங்கா நகரம் மதுரை என்பது பழமொழி. ஆனால் இரவு பகல் பாராமல் மக்கள் நலனுக்காக துாங்காமல் பணியாற்றிய மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கொண்ட ஊர் ராமநாதபுரம் என்பது புதுமொழி. இவர்கள் வரிசையில் நல்ல மன்னனுக்கு ஏற்ற தளபதியாக மாற்றுத்திறனாளி நல அலுவலரின் செயல்பாடு அமைந்துள்ளதால் மாற்றுத்திறனாளிகள் மனதார பாராட்டுவதை கண்டு நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெடரேஷன் தேசிய தலைவரும், புலனாய்வு எக்ஸ்பிரஸ் இதழ் ஆசிரியருமான தேசிய விருதாளர் டாக்டர் அப்துல் ரசாக் மாவட்டத்திற்கு கிடைத்த அதிகாரிகளையும் அலுவலர்களையும் மனதார பாராட்டி உள்ளார்.
அவர் இதுகுறித்து தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட ஆட்சித்தலைவரும், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகிய இருவரின் தீவிர அயராது உழைப்பின் காரணமாக மாவட்ட மக்கள் நலமுடன் வீட்டில் நிம்மதியாக உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ துவங்கியவுடன் பிரதமர் நரேந்திர மோடி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். அவரது நடவடிக்கையை தொடர்ந்து தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் சுகாதார துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் ஆகியோரும் தமிழக மக்களை காப்பாற்றுவதில் தனிக்கவனம் செலுத்தினர். தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டதில் இருந்து தீவிரமாக கண்காணிப்பு பணியை மேற்கொண்டார். மேலும், அனைத்து துறை அலுவலர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்றின் விளைவுகளை எடுத்துக்கூறி மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பதற்கு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார். இவரை தொடர்ந்து காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் வருண்குமார் மாவட்டத்தின் எல்லை முதல் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் மூலம் ரோட்டில் யாரும் நடமாடக்கூடாது என 24 மணி நேரமும் உணவின்றி துாக்கமின்றி பாதுகாப்பு பணியில் இருந்தனர். மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் துாக்கத்தை இழந்து நமக்காக அரும்பாடுபட்டு சுகாதார நடவடிக்கையை முடுக்கிவிட்டனர். பாதுகாப்பு பணியையும் செம்மைப்படுத்தினர். அதன்விளைவாகவே இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பெருமளவில் வெளிநாடு சென்றுவருவோர் இருந்தும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு என்பது 2 பேருக்கு மட்டுமே இருந்தது.

மன்னனுக்கு ஏற்ற தளபதி

நாட்டில் சிறந்த மன்னனுக்கு ஏற்ற தளபதி இருந்தால் நாடு அனைத்து வகையிலும் முன்னேற்றம் அடையும் என்பதற்கு உதாரணமாக இருப்பது போல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவுக்கு இணங்க குறிப்பிட்டு சொல்லக்கூடிய துறையான மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் மாவட்ட ஆட்சித்தலைவர் பிறப்பிக்கும் ஒவ்வொரு உத்தரவையும் உடனுக்குடன் நிறைவேற்றி மாற்றுத்திறனாளிகள் சிரமம்படாத வகையில் துரிதமாக செயல்பட்டு வருகிறார்.

மாவட்டத்தில் மக்களுக்காக தீவிரமாக பாடுப்பட்டு
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுத்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் வருண்குமார் ஆகியோர் பணியே முக்கிய காரணமாகும். மாவட்ட மக்கள் அனைவரும் நமக்கு கிடைத்த மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு என்றென்றும் நன்றி கடன்பட்டவர்களாக இருக்க வேண்டும், என, நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெடரேஷன் தேசிய தலைவரும், புலனாய்வு எக்ஸ்பிரஸ் இதழின் ஆசிரியருமான தேசிய விருதாளர் டாக்டர் அப்துல் ரசாக் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வெளியிடுவோர்
தேசிய விருதாளர் டாக்டர் அப்துல் ரசாக்
தேசிய தலைவர்
நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெடரேஷன்
ஆசிரியர்
புலனாய்வு எக்ஸ்பிரஸ் இதழ்
இராமநாதபுரம்
98424 23742
94434 65765

News

Read Previous

மானுடம் காப்போம்

Read Next

உலகத்தீரே கொஞ்சம் கேளுங்கள்…

Leave a Reply

Your email address will not be published.