கீச்சுப்புள்ளி – இணையதளம் அறிமுகம்

Vinkmag ad

 

கீச்சுப்புள்ளி – இணையதளம் அறிமுகம் எதிர்நீச்சல்


கீச்சுப்புள்ளி – இணையதளம் அறிமுகம்

Posted: 07 Feb 2014 07:35 PM PST

கடந்தாண்டு செப்டம்பர் 23ம் தேதி உதயம் ஆகிய RT_tamil என்ற டிவிட்டர் தானியங்கி தொடர்ந்து எதிர்பார்த்த வண்ணம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் முக்கிய நோக்கம் என்னவென்றால் ரசனையான கீச்சர்களையும், நல்ல வாசகர்களையும் இணைப்பதேவாகும். ஆரம்பத்தில் சொந்தப் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டாலும் தற்போது அதனைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கைப் படி இதன் பயன்பாட்டை உணர்ந்து தரம் கூட்டப் படுகிறது. மேலும் சில இணைய ஊடகங்களும் இதனை விரும்ப ஆரம்பிக்கிறார்கள். எனவே வாசகர்கள் அதிகரிக்க அதிகரிக்க, பொறுப்புகளும் அதிகரிக்கிறது. ஆரம்பத்தில் 100 டிவிட்டர் கணக்குகளை மட்டும் பின்தொடர்ந்து கீச்சுகளை எடுத்த நிலையிலிருந்து இன்று 6000 தமிழ்க் கீச்சுக் கணக்குகளைப் பின்தொடர்கிறது. அதனால் நாளொன்றிற்குத் தமிழில் கீச்சப்படும் சுமார் 1,07,100 கீச்சுகளை அந்தந்த நிமிடங்களில் அலசி அதிகம் பகிரப்பட்ட அல்லது அதிகம் விரும்பிய காரணிகள் மூலம் முடிந்தளவிற்குச் சிறந்த கீச்சுகளை எடுத்துத் தருகிறது. ஒருவகையில் நுண்பதிவு திரட்டி என்கிற ரீதியில் செயல்படுகிறது. அதேபோல அதன் தரத்தையும் அவ்வப்போது தொழிற்நுட்ப ரீதியில் சோதனைகள் செய்யப்பட்டே வருகிறது.

RT_tamilன் மறுகீச்சுகள் எல்லாம் தானியங்கியால் செய்யப்படுவதால் நடுநிலை என்கிற கவசம் உண்டு. அதே நேரத்தில் மனித தலையீடுகள் இல்லாததால் எல்லாக் கீச்சுகளும் சிறந்த கீச்சுகள் என்று சொல்லிக் கொள்ள முடியாதுதான் ஆனால் பிரபலமான கீச்சு என்று சொல்லிக் கொள்ள முடியும். டிவிட்டர் சூழலே இல்லாதவர்கள் அவ்வப்போது இங்கு வந்து படிப்பதையும் ரசிப்பதையும் முடிந்தால் டிவிட்டர் கணக்கைத் திறப்பதையும் அதன் புள்ளிவிபரங்களால் அறியமுடிகிறது. மேலும் டிவிட்டர் இடைமுகம் என்பது சிறந்த வாசகர் ஊடகமில்லை, அங்கே குறுகிய நேர எல்லைக்குள் மட்டுமே படிக்கமுடியும். கடந்த ஆண்டு ஒரு முக்கிய நிகழ்வின் போது டிவிட்டர் என்கிற நுன்பதிவு எப்படி கருத்தைப் பிரதிபலித்தது என்று இன்று தேடமுடியாது.

அதற்கான ஒரு தீர்வாகவும், ஆவணப்படுத்தலின் அங்கமாகவும், வலைப்பதிவு வாசகர்களுக்கு தங்கமாகவும் கீச்சுப்புள்ளி என்கிற இணையத்தளம் உதயமாகிறது. தினமும் கீச்சப்படும் கீச்சுகளில் முன்னணி கீச்சுகள் இங்கே வலைபதிவு செய்யப்படுகிறது. இது கடந்த 24மணிநேரத்தில் அதிகம் பகிரப்பட்ட கீச்சை மட்டுமே எடுத்துக் கொள்கிறது, RT_tamil கணக்கின் நேரடி இணையத்தள வாரிசு என்றாலும் தவறில்லை. அதன் அளவுகோல்கள் என்று நிரந்தரமாக ஏதுமில்லை அவ்வப்போது எண்ணிக்கையின் அடிப்படையில் எல்லைகளைத் தானியங்கி மாற்றிக் கொள்கிறது. ஆனால் அடிப்படை அளவுகோல் என்பது ஐந்து நபராவது விரும்பும் கீச்சு, விளம்பரம் அல்லாத கீச்சு, அரசியல்/திரை பிரபலங்கள் அல்லாதோரின் கீச்சு (இவர்களுக்குத்தான் ஊடகங்கள் இருக்கிறதே) முக்கியமாக, தமிழ்க் கீச்சு என்று சொல்லலாம். இந்த அடிப்படை முரண் கொண்ட கீச்சுகள் இருந்தால் சுட்டிக் காட்ட மறவாதீர்கள்.

பிறரின் கீச்சுகளை அவர்களின் அனுமதி இல்லாமல் கீச்சுப்புள்ளிஇணையத்தளத்தில் வெளியிடுவது காப்புரிமை பிரச்சனை இல்லையா என்றால், “இல்லை” என்பதே பதில். சட்ட ரீதியாகப் பார்த்தால் காப்புரிமை செய்யப்பட்ட ஒன்றில் தான் காப்புரிமை மீறல் என்ற சிக்கவரும். ஆனால் டிவிட்டர் கணக்கு ஆரம்பிக்கும் போதே பகிர்வுரிமைக்கான ஒப்பத்தை வாங்கிக் கொள்கிறது (காப்புரிமை செய்யவில்லை ஆனால் பொறுப்புரிமை உள்ளது). தார்மீக ரீதியாகப் பார்த்தால், கீச்சுப்புள்ளி என்பது ஒரு கீச்சர்-வாசகர் பந்தத்தை மட்டுமே உருவாக்குவதால், உண்மையான கீச்சர் பெயரிலேயே பயன்படுத்துகிறது. அரசியல் ரீதியாகப் பார்த்தால், யாருடைய படைப்புகளையும் கொண்டு லாபம் அடைவதில்லை. இருந்தும் கீச்சுப்புள்ளியில் கீச்சுகளைப் பகிர்வதில் விருப்பமில்லாதவர்கள் தாராளமாகத் தெரிவிக்கலாம்.

தொந்தரவு ரீதியாகப் பார்த்தால், இது ஒரு தானியங்கி பதிவேற்றமே என்பதால் இதன் நிர்வாகியின் கீச்சுகள் கழுத்தை அறுக்காது என்பதை மறுக்காமல் பதிவுசெய்யப்படுகிறது. மேலும் சிறந்த பாதைகள் அடையாளம் காணப்பட்டு, தேவையின் பேரில் விரிவும் படுத்தப்படும். வழமை போல இதன் நிறைகுறைகளைத் தெரிவித்து மேலும் சிறக்க உதவுங்கள்.

மேலும் ஒரு செய்தி, RT_tamil போலவொன்றை மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாக்கப் போதிய அம்மொழி கீச்சுகள் தற்போது இல்லை. தமிழ் மட்டுமே அதிகமாக டிவிட்டரில் பயன்படுத்தப்படும் தென்னிந்திய மொழியாகும் என்றே தெரிகிறது. இது மேலும் சொல்லும் செய்தியாதேனில் இத்தகைய படைப்பாக்கக் கீச்சுகள் வேறு மொழிகளில் அதிகம் இல்லை என்பதுவும்தான்.

ரீடரிலிருந்தும் இன்ட்லி தமிழ்10ல் வாக்களிக்கலாம்.

News

Read Previous

இரவில் தூங்குவதற்கு முன்னால் …..

Read Next

ஜான்சன் & ஜான்சன் கம்பெனி லைசென்ஸ் ரத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *