அதிகரிக்கும் ஞாபக சக்தி”

Vinkmag ad

அதிகரிக்கும் ஞாபக சக்தி”

☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘

நாம் உண்ணும் உணவில், இஞ்சியை சேர்த்துக் கொள்வதால், உணவு எளிதில் ஜீரணமாகிறது. இஞ்சிக்கு, ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் உண்டு.

குடலில் சேரும் கிருமிகளை அழித்து, கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. மலச்சிக்கல், வயிற்றுவலி ஏற்பட்டால், இஞ்சி சாறில், சிறிது உப்பு கலந்து பருகினால், நிவாரணம் கிடைக்கும்.

பசி எடுப்பதில் தொந்தரவு இருக்கிறது என்றால், இஞ்சியுடன், கொத்தமல்லி துவையல் அரைத்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கஷாயம் போட்டு குடித்தால் குணமாகும்..

தொண்டைவலி, ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு, அருமருந்தாக விளங்குகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி:

சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். இதய அடைப்பை நீக்கும். ரத்த அழுத்தம் வராமல் தடுக்கும்.

சளித்தொல்லையை நீக்கும்;

இஞ்சியை, தினமும் காலையில் சிறிது உட்கொண்டு வருவதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதில், வைட்டமின் ஏ, சி பி6 பி12 கால்சியம், பொட்டாசியம், சோடியம் இரும்பு சத்து ஆகியவை அடங்கியுள்ளன.

நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடனும், சீராக வைக்கவும் உதவுகிறது.

உடலில், ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில், இஞ்சி சிறந்து விளங்குகிறது. சிறிது இஞ்சியை அரைத்து பேஸ்ட் செய்து, நீரில் கலந்து நெற்றியில் தடவினால், ஒற்றைத் தலைவலி நீங்கும். நீரில், சிறிது இஞ்சியை தட்டிப்போட்டு, கொதிக்க வைத்து இறக்கி, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்ந்து கலந்து குடிக்க, நெஞ்சுப் பகுதியில் தேங்கியுள்ள சளி முறிந்து, விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

ஜீரணத்துக்கு உதவும்:

பல் வலி இருக்கும் போது, இஞ்சி துண்டை, ஈறுகளில் மசாஜ் செய்தால், நிவாரணம் கிடைக்கும். இல்லாவிட்டால், நீரில் இஞ்சியை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து, நீரால் வாயை கொப்பளிக்க வேண்டும். குமட்டல், வாந்தி வருவதை தடுக்கும். காலையில் ஏற்படும் சோர்வையும் தடுக்கும். துரித உணவுகளால், செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டால், அதை சரிசெய்ய, இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வருவது நல்ல பலனைத் தரும்.

ஆஸ்துமா நோயாளிகள் தினமும் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வர, ஆஸ்துமா பிரச்னையில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். குறிப்பாக, நுரையீரலுக்குள் செல்லும் ரத்த நாளங்கள், புத்துணர்வு பெற்று, ரத்த ஓட்டம் சீராகி, சுவாசப் பிரச்னைகள் நீங்கும். இஞ்சி, தேன் கலவை செரிமானத்தை மேம்படுத்துவதோடு, பைல் சுரப்பை தூண்டி, வயிற்றில் தங்கியுள்ள கொழுப்பைக் கரைக்கும்.

இதனால் தொப்பை குறையும். நல்ல மாற்றத்தைக் காண தொடர்ந்து, 40 நாட்கள் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வர வேண்டும். அதே சமயம் உணவுக் கட்டுப்பாடும் அவசியம்.

உற்சாகத்துக்கு உத்தரவாதம்:

தேன் கலந்த இஞ்சி சாறு, புற்றுநோய் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும். இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து விடும். இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.

இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும். இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து, ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர ஆரம்ப கால ஆஸ்துமா, இருமல் குணமாகும்.

ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மருத்துவ முறை அவசியம்…..!

News

Read Previous

என்றும் இளமையோடு வாழ ……

Read Next

முதியோர் நலனில் இளையோர்க்கு அக்கறை இருக்கிறதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *