2014 ஜனவரி 1 முதல் அபுதாபியில் மௌலித் ஷரீப் மற்றும் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி
அபுதாபி : அபுதாபி மௌலிது கமிட்டியின் சார்பில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருள் புகழ் பாடும் மௌலித் ஷரீப் மற்றும் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி 01.01.2014 புதன்கிழமை முதல் 13.04.2014 திங்கட்கிழமை வரை தினந்தோறும் இரவு 7.45 மணிக்கு துவங்கி 9.45 மணிக்கு நிறைவு பெறும்.
அபுதாபி நஜ்தா சாலையில் அமைந்துள்ள ஈடிஏ ஹெச்.ஆர்.டி. ஹாலில் இந்நிகழ்ச்சி தினமும் நடைபெறும்.
சேலம் நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரி பேராசிரியர் மௌலவி எம். முஹம்மது அபுதாஹிர் பாகவி தொடர் சொற்பொழிவு நிகழ்வில் உரை நிகழ்த்துகிறார்.
தினசரி கேள்வி – பதில் போட்டி, ஸலவாத்துப் போட்டி, சிறுவர்களுக்கான கேள்ளி – பதில் போட்டியும் நடைபெறும். பங்கு பெற விருப்பமுள்ளோர் www.mawlidcommittee.net எனும் இணையத்தளத்தில் இருந்து விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
கடந்த ஏழு வருடங்களாக இந்நிகழ்ச்சி குறித்த நேரத்தில் தொடங்கி சரியான நேரத்தில் முடிக்கப்படுவது பங்கேற்பவர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு 050 85 68 600 / 050 758 4002 ஆகிய எண்களிலோ அல்லது contactus@mawlidcommittee.net எனும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.