இயற்கையைப் பார்ப்போம்
இயற்கையைப் பார்ப்போம்
மதுஒழிப்புப் போராட்டம்
மனிதர்களுக்குத்தான்!
எந்தவண்டும் மதுவுண்ட
மயக்கத்தில் யாருக்கும்
கஷ்டங்கள் கொடுப்பதில்லை!
சாதிச்சண்டைகள் என்றென்றும்
மனிதர்களுக்குத்தான்!
எந்தச்சேவலும் சாதிக்காகச்
சண்டைகள் போடுவதில்லை!
ஒற்றுமையின்மை என்றுமே
மனிதர்களுக்குத்தான்!
எந்தக்காகமும் தான்மட்டும்
உண்டுகளித்ததில்லை!
உயர்வும் தாழ்வும்
மனிதர்களுக்குத்தான்!
எந்தபூமியும் உயர்வானவர்களுக்கு
மட்டும் சுற்றுவதில்லை!
தீண்டாமை என்பது
மனிதர்களுக்குத்தான்!
எந்தத்தென்றலும் யாரையும்
தீண்டாமல் விடுவதில்லை!
ஏழை பணக்காரனெல்லாம்
மனிதர்களுக்குத்தான்!
எந்தமழையும் பணக்காரனுக்கு
மட்டும் பெய்வதில்லை!
இயற்கையைப் பார்ப்போம்
இணைந்து வாழ்வோம்!
அரிவாள்கள் முட்களைக் களையட்டும்!
கம்புகள் அடுப்பெரியப் பயண்பட்ட்டும்!
அனபால்நாம் இயற்கையாய் வாழ்வோம்!!
காரைக்குடி. பாத்திமா ஹமீத்
ஷார்ஜா