1. Home
  2. உழவர்

Tag: உழவர்

பெயரில் மட்டுமே பெருமக்களாக உழவர்கள்…

பெயரில் மட்டுமே பெருமக்களாக உழவர்கள்…   “கடன் வாங்கி பயிரிட்டவனும் மரமேறி கைவிட்டவனும் ஒண்ணு”  என்று சொல்வார்கள். அது உழவர் பெருமக்களின் மாறாத வாழ்க்கை நிலையையும் கடன்சுழலையும் குறிப்பதற்காகவே சொல்லப்பட்டது. எத்தனையோ மாற்றங்கள் வந்தாலும் இன்னும் மாறாத நிலைதான் நீடிக்கிறது விவசாயிகளை பொறுத்தமட்டில். உழவர்கள் பெயரில்தான் பெருமக்களாக இருக்கிறார்களே தவிர வாழ்க்கையில் தாங்கள் சாகுபடி வேலைகளில் சாதாரணமானவர்களாகவே இருக்கிறார்கள். அதனால்தான் விவசாய வேலைகளை துவங்குவதற்காக முதலில் விதை உள்ளிட்ட பொருட்களை தேடுகிறார்களோ இல்லையோ கடன் வாங்குவதற்கு ஆட்களைத் தேடுகிற நிலை இன்னும் மாறாமலே இருக்கிறது.   காவிரியில் தண்ணீர் திறந்தாலும் காலத்தில் பருவமழை பெய்தாலும் விவசாயிகள் கடனாளிகளாகவே தங்கள் காரியங்களை துவங்குகிறார்கள். அதனால்தான் ஒருபகுதி விவசாயிகள் கந்துவட்டிக்காரர்களிடம் செல்லாமல் கூட்டு றவு வங்கிகளையும், சங்கங்களையும் நாடுகிறார் கள். அதிலும் மண்ணைப் போடுவதை போல இன்றைய தமிழக ஆட்சியாளர்கள் நகைக் கடன் வழங்க வேண்டாம் என்று வாய்மொழியாக உத்தரவிட்டு இடையூறு செய்திருக்கிறார்கள். விவசாயிகள் அல்லும் பகலும் பாடுபட்டு தங்கள் உழைப்பில் கிடைத்த விளைபொருட்களை விற்பதற்கு கொள்முதல் நிலையம் அமைக்காததால் வியாபாரிகளிடம் அடிமாட்டு விலைக்கு விற்று நட்டமே அடைகிறார்கள்.   அவர்களது கடைசி முயற்சியாக வீட்டிலிருக்கும் நகைநட்டுகளை அடமானம் வைத்து கடன் வாங்கி விவசாயம் செய்ய முயல்கிறார்கள். அதிலும் இடி விழுந்தாற்போல் ஆட்சியாளர்கள் நகைக்கடன் வழங்க வேண்டாமென உத்தரவை போடுகிறார்கள். இந்த அநீதியான நடவடிக்கைக்கு எதிராக கண்டனங்களும், எதிர்ப்புக் குரல்களும் எழுந்தபின்னர் நானும் ஒரு விவசாயி என்று கூறிக் கொள்ளும் தமிழக முதல்வர், நகைக்கடனை நிறுத்தவில்லை என்று சமாளிக்கிறார். அத்துடன் வங்கிகளில் டெபாசிட் செய்தவர்களுக்கு பணத்தை திரும்பக் கொடுக்க வேண்டுமென்பதற்காக குறிப்பிட்ட நிதியை வைத்துக் கொண்டு கடன்களை வழங்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறியிருக்கிறார். கடந்த காலங்களில் டெபாசிட் கட்டியவர்கள் பணத்தை திரும்ப வாங்காமலா இருந்தார்கள். அப்போது நகைக்கடன் வழங்கப்படவில்லையா? தமிழகத்தில் அப்படியொன்றும் டெபாசிட் கட்டிய தொகை அதிகமில்லை. 4,500 சங்கங்கள் உள்ள தமிழகத்தில் ரூ.35ஆயிரம் கோடிதான். ஆனால் 1450 சங்கங்களே உள்ள அண்டை மாநிலமான கேரளத்தில் உள்ள டெபாசிட் தொகையோ ரூ.90 ஆயிரம் கோடி. அதனால் ஊருக்கெல்லாம் உணவளிக்கும் விவசாயி தவிக்கும்போது அவர்களை கைதூக்கி விடாவிட்டாலும் பரவாயில்லை; காலை வாரிவிடாமல் இருந்தாலே போதும். முந்தைய காலங்களைப்போலவே நகைக்கடன் நாடி வரும் விவசாயிகளுக்கு இல்லையென மறுக்காமல் கடன் வழங்கி உதவிடுவதே தமிழக விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்கும் நடவடிக்கையாகும். -ஜூலை 17 தீக்கதிர் தலையங்கம்

‘சொல்லேர் உழவர் பகை!’

திசையில்லாப் பயணம் 14: ‘சொல்லேர் உழவர் பகை!’ இந்திரா பார்த்தசாரதி   Share சில மாதங்களுக்கு முன்பு, மத்திய அரசாங்க வழக்கறிஞர், ‘இந்தியப் பிரஜை யாருக்கும் அந்தரங்கம் (privacy) என்று எதுவும் இந்திய அரசியல் சட்டத்தின்படி கிடையாது’ என்று ‘ஆதார்’ வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் கூறினார். இதைச் சற்று…

உழவர்களின் உழைப்பை உளமார வாழ்த்துவோமாக!

உழவர்களின் உழைப்பை உளம்நிறைவுடன் உணர்த்தும் திருக்குறள்: 1031. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. 1032. உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து. 1033. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். 1034. பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை…