கடலோரக் கூடார வாசிகள்===ஆர் எஸ் கலா இலங்கை
கடலோரக் கூடார வாசிகள்===
ஐலேசா ===ஐலேசா
ஐலேசா ===ஐலேசா
ஏலேலோ ===ஏலேலோ ==
ஐலேசா………\
துடிக்கும் மீனை தூக்குப் போடு
கண்ணையா……ஐலேசா
கூடயை நிறைச்சிக்கோ
பொன்னையா……ஐலேசா
கொட்டிப்புட்டு துட்டு
வாங்கு சுப்பையா….ஐலேசா
பெட்டிக்குள்ளே துட்டைப் போடு
குப்பம்மா……ஐலேசா
ஐலசா===ஐலசா===
ஐலேசா….ஐலேசா…
ஏலேலோ…..ஏலேலோ…
ஐலேசா….ஐலேசா…..\
ஐயா வாரார் …. ஐலேசா
கை மேலே பையைப் பார்…ஐலேசா
கண்ண மூக்கப் பார்த்து
அள்ளப் போரார்….ஐலேசா
கவணமாகப் பாத்துகோடா…ஐலேசா
வாயாடியே வென்று விடுவார்….ஐலேசா
வாதாடப் பழகிக்கோடா…..ஐலேசா…..\
ஐலேசா ===ஐலேசா
ஏலேலோ===ஏலேலோ
ஐலேசா===ஐலேசா…..\
துண்டாகப் போன மீன்
எடுத்து சின்னம்மா….ஐலேசா
தூக்கலாக உப்பு போட்டு…ஐலேசா
உச்சி வெயிலில் வெட்ட வெளியில்
போட்டு…..ஐலேசா
பக்குபமாக கருவாடாய் எடுத்து
விடு சின்னம்மா….ஐலேசா…..\
ஐலேசா===ஐலேசா
ஏலேலோ===ஏலேலோ
ஐலேசா===ஐலேசா…..\
கட்டு மரம ஏற வேண்டும்
மாமாவே மாமாவே …ஐலேசா
கட்டுச் சோறு கட்டிப்புட்டேன்
மாமாவே மாமாவே….ஐலேசா
கருவாடும் வறுத்து வைத்தேன்
மாமாவே மாமாவே….ஐலேசா
கண்ணாத்தா என் கையாலே
ஆக்கி வைத்தேன் மாமாவே
என் மாமாவே…..\
ஐலேசா===ஐலேசா
ஏலேலோ===ஏலலோ
ஐலேசா==ஐலேசா…..\
கோழி கூவும் நேரம் நான்
வீடு வருவேன்….ஐலேசா
எரியும் விளக்கை தூண்டி
விட்டு காத்திரு கண்ணம்மா….ஐலேசா
கூடாரத்தை மூடிக்கோ கண்ணம்மா…ஐலேசா
கூடாத பசங்க நடமாட்டம் உள்ளதடி…ஐலேசா….\
ஐலேசா=====ஐலேசா
ஏலேலோ=====ஏலேலோ
ஐலேசா===ஐலேசா……\
கூடார வீட்டுக்குள்ளே மாமாவே
மாமாவே….ஐலேசா
கூராண அருவாள் இருக்கு
மாமாவே மாமாவே…ஐலேசா
கூடவே துணிவும் இருக்கு
மாமாவே மாமாவே…..ஐலேசா
கூவி உரக்க அழைக்க
குரலும் இருக்கு மாமாவே
மாமாவே….ஐலேசா…..\
ஐலேசா===ஐலேசா
ஏலேலோ===ஏலேலோ
ஐலேசா===ஐலேசா….\
அப்படி தள்ளுடா ..ஐலேசா
இப்படி பிடிடிடா…ஐலேசா
ஐலேசா…..ஐலேசா….\