கவிதைகள் (All)

கடன் — க.து.மு. இக்பால், சிங்கப்பூர்

 

வெளிச்சத்தில் மட்டுமல்ல

இருட்டிலும்

என்னைத் தொடரும்

நிழல்

 

கருவில் வாங்கிய கடன்

கண்ணை மூடிய பிறகும்

அகல்வதில்லை

 

என் சேமிப்புப் பெட்டி முழுதும்

காலிசெய்ய முடியாமல்

நிரம்பி வழிகிறது

கடன்

 

என் பக்தி

கடவுள் கொடுத்த கடனைத்

தீர்ப்பதல்ல;

புதிய கடனுக்குப் போடும் விண்ணப்பம்

 

கடன் தருவதற்குக்

கடனாளிகளிடம்

என்ன இருக்கிறது?

நமக்குத் தெரிந்ததெல்லாம்

கடனை

இடம் மாற்றி விடுவதுதான்

 

உடல் சுமப்பது

உயிரையல்ல;

கடனை

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button