வங்கிகளில் உங்கள் குறைகளை பதிவு செய்ய ….

Vinkmag ad

வங்கிகள் குறை தீர்ப்பாயத் திட்டம் 2006-ஆம் ஆண்டு வணிக மயமாக்காப்பட்ட வங்கிகள் (பொதுத்துறை மற்றும் தனியார்த்துறை), பிராந்திய ஊரக வங்கிகள், முறைப்படுத்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றின் சேவையில் உள்ள வாடிக்கையாளர்களின் மனக்குறைகளை அவர்கள் தெரிவிப்பதற்கு வழி வகுக்கிறது. வங்கிகள் வாடிக்கையாளர்களின் மனக்குறையினை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்த்துவைப்பது கட்டாயமாகும். வங்கிகளின் பதிலில் வாடிக்கையாளர் திருப்தி அடையாவிட்டாலோ அல்லது வங்கிகள் வாடிக்கையாளரின் குறைகளை தீர்த்து வைக்காவிட்டாலோ வாடிக்கையாளர்கள் வங்கிகள் குறை தீர்ப்பாயத்திடம் மேல் முறையிடலாம்.
 
வங்கி வாடிக்கையாளர்கள் கீழ்க்கண்ட வங்கி சேவைகள் தொடர்பான தங்களது குறைகளை விண்ணப்பமாக தெரிவிக்கலாம்

ஒரு வங்கி கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு பண மாற்றம்
வரைவோலைக்கு பணம் பெறுதல்
ஏடிஎம் மற்றும் பணம் பெறும் அட்டை
கடன் அட்டை
இணையதளம் மூலம் வங்கி வசதி
வங்கிக்கடன்
நடமாடும் வங்கி மற்றும் இதர
 
குறைகளின் அடிப்படை
வங்கி குறைதீர்ப்பாயம் அல்லது வங்கியிடம் எந்த ஒரு நபரும் கீழ்க்கண்ட எந்த வங்கி அல்லது இணையதள வங்கி சேவை குறைகள் அல்லது இதர சேவைக்குறைபாடுகளின் அடிப்படையில் தங்களுடைய குறைகளை பதிவு செய்யலாம்.
 

பணம் கொடுக்காமல் இருத்தல் அல்லது பணம் கொடுப்பதில் தேவையற்ற காலதாமதம், வரைவோலை, இதர பில்கள் மூலம் பணம் பெறுவதில் காலதாமதம்
ஏடிஎம், கடன் அட்டை, பணம் பெறும் அட்டை போன்றவை சம்பந்தமான சேவை குறைபாடுகள்
எந்த ஒரு சேவைக்காகவும் குறைந்த அளவு தொகையினை முறையான காரணமின்றி ஏற்றுக்கொள்ளாமல் இருத்தல், தேவையில்லாமல் கட்டணம் வசூலித்தல்
பணம் திரும்ப தராமல் இருத்தல் அல்லது பணம் திரும்ப தருவதில் காலதாமதம்
வரைவோலை, டிராப்ட்கள், மற்றும் பண ஆணை போன்றவற்றை தராமல் இருத்தல் அல்லது இவற்றை தருவதில் காலதாமதம்
வேலை நேரத்தினை முறையாக பின்பற்றாதது
கடன் மற்றும் முன்பணம் போன்றவற்றைத் தவிர இதர வங்கி சேவைகள் அளிக்காமை அல்லது கால தாமதம் செய்தல்
டெபாசிட் தொகையினை திரும்ப தராமல் இருத்தல், வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கில் பணம் போடுதல், போன்றவற்றில் கால தாமதம், வட்டி விகிதம், டெபாசிட், நடப்புக்கணக்கு மற்றும் இதர கணக்கு போன்றவற்றில் ரிசர்வ் வங்கியின் வரைமுறைகளை பின்பற்றாமல் இருத்தல்
ஓய்வூதியம் தராமல் இருத்தல் அல்லது ஓய்வூதியம் தருவதில் காலதாமதம்
ரிசர்வ் வங்கி, இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு வரி செலுத்தும் போது ஏற்றுக்கொள்ளாமல் இருத்தல் அல்லது ஏற்றுக்கொள்ளுவதில் காலதாமதம்
அரசாங்க பிணையப்பத்திரங்கள் போன்றவற்றை விநியோகிக்காமல் இருத்தல், விநியோகிப்பதில் ஏற்படும் குறைபாடுகள், விநியோகிப்பதில் காலதாமதம்
போதுமான காரணங்களின்றியும், முன்னறிவிப்பின்றியும் டெபாசிட் கணக்குகளை முடித்தல்
கணக்குகளை முடிப்பதில் அல்லது மூடுவதற்கு ஒப்புக்கொள்ளாதது அல்லது காலதாமதம் செய்தல்
வங்கியால் வரையறுக்கப்பட்ட செயல்முறைகளை பின்பற்றாததது
கடன் விண்ணப்பங்களை பரிசீலித்து கடன் வழங்க ஒப்புக்கொள்ளுதல் மற்றும் கடன் வழங்குதலில் காலதாமதம்
முறையான காரணங்கள் இல்லாமல் கடன் விண்ணப்பங்களை விண்ணப்பதாரரிடமிருந்து பெற்றுக்கொள்ள மறுத்தல்
வாடிக்கையாளர்களிடன் வங்கிகள் நடந்து கொள்ளவேண்டிய விதி முறைகளை பின்பற்றாமல் இருத்தல்
கடன்களை வசூலிக்க முகவரை நியமிப்பது போன்றவற்றில் ரிசர்வ் வங்கியின் வரைமுறைகளை பின்பற்றாமல் இருத்தல்.
 
எங்கு குறைகள் பற்றிய விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பது ?

உங்கள் கணக்கு இருக்கும் குறிப்பிட்ட வங்கிகளில் குறைகள் அடங்கிய விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்
குறைகள் பற்றிய விண்ணப்பத்தினை அதற்குரிய அதிகாரியிடம் சமர்ப்பிக்கவேண்டும்
குறைகள் பற்றிய விண்ணப்பம் ஒரு வெள்ளைத்தாளிலோ அல்லது அதற்குரிய வரையறுக்கப்பட்ட விண்ணப்பமாகவோ வங்கிகளில் சமர்ப்பிக்கப்படவேண்டும்
குறைகள் பற்றிய விண்ணப்பத்தினை பெற்றுக்கொண்டவுடன் அதற்குரிய அதிகாரி விண்ணப்பத்தினை பெற்றுக்கொண்டதற்கான உறுதிஅட்டையினை விண்ணப்பதாரரிடம் தரவேண்டும.
 
குறைகள் பற்றிய விண்ணப்பத்தினை வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டிய செயல்முறை

குறைகள் பற்றிய விண்ணப்பத்தினை கடிதமாகவோ அல்லது இணையம் மூலமாகவோ வங்கியிடம் சமர்ப்பிக்கலாம்

கடிதம் வாயிலாக நீங்கள் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதாக இருந்தால் கீழ்க்கண்ட ஆவணங்களை உங்கள் விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டும்

உங்களுடைய வங்கிக்கணக்கு பாஸ் புத்தகம் – அடையாள ஆவணமாக
உங்களுடைய வேண்டுகோளுக்கான சாட்சிக்கான ஆவணங்கள்
குறிப்பிட்ட வங்கி அதிகாரியிடமிருந்து விண்ணப்பத்தினை சமர்ப்பித்தவுடன் விண்ணப்பத்தினை சமர்ப்பித்ததற்கான உறுதி அட்டையினை பெற்றுக்கொள்ளவும்.
 
இணையம் மூலம் உங்கள் குறைகளை பதிவு செய்தல்

பெரும்பாலான பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் இணையம் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் குறைகளை பதிவு செய்ய வசதியினை ஏற்படுத்தியுள்ளன
உங்களுடைய குறைகளை பதிவு செய்ய கீழ்க்கண்ட இணைய தள முகவரியினை சொடுக்கவும்
சில வங்கிகள் இன்னும் இணையம் மூலம் வாடிக்கையாளர் குறைகளை பதிவு செய்வதற்கு வசதிகள் ஏற்படுத்தவில்லை. உங்களுடைய வங்கி அத்தகையாதக இருப்பின் கடிதம் வாயிலாகவே உங்கள் குறைகள் பற்றிய விண்ணப்பத்தினை பதிவு செய்யமுடியும்.

குறைகளை பற்றிய விண்ணப்பத்தினை பதிவு செய்தவுடன் என்ன செய்வது?

வாடிக்கையாளர்கள் குறைகளை தீர்க்க வங்கிகள் பொதுவாக 2-3 வார காலம் எடுத்துக்கொள்ளும். ஆனால் இந்த கால இடைவெளி வங்கிகளுக்கு வங்கி வேறுபடும்
உங்களுடைய விண்ணப்பத்திற்கு வங்கி பதிலளிக்காமலோ அல்லது குறைகளை தீர்ப்பதில் காலதாமதம் செய்தாலோ நீங்கள் வங்கியினை தொடர்பு கொண்டு உங்கள் விண்ணப்பத்தினை பற்றி நினைவூட்டலாம். இதற்கு பின்பும் வங்கிகள் பதிலளிக்காமல் இருந்தால் நீங்கள் ‘ வங்கி குறை தீர்ப்பாயத்தினை’ அணுகலாம்
வங்கிகள் உங்களுக்கு அளித்த பதிலில் நீங்கள் திருப்தி அடையாமல் இருந்தாலும் நீங்கள் வங்கி குறை தீர்ப்பாயத்தினை அணுகலாம்
உங்களுடைய குறைகள் பற்றிய விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள வங்கிகள் குறை தீர்ப்பாயம் நாடெங்கிலும் 15 மண்டல அளவிலான அலுவலகங்களைக் கொண்டுள்ளது
வங்கி குறை தீர்ப்பாயத்திற்கு எவ்வாறு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது?

ஒவ்வொரு வங்கிகள் குறை தீர்ப்பாயமும் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் அதிகாரத்தினை கொண்டுள்ளன
உங்கள் மாநிலம் அல்லது வங்கிக்கு மேலுள்ள வங்கிகள் குறை தீர்ப்பாயத்திடம் உங்களது விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்
வங்கிகள் குறை தீர்ப்பாயத்திடன் உங்கள் குறைகள் பற்றிய விண்ணப்பங்களை கடிதம் வாயிலாகவோ அல்லது இணையம் வாயிலாகவோ நீங்கள் தெரிவிக்கலாம்
கடிதம் வாயிலாக நீங்கள் உங்கள் விண்ணப்பத்தினை தீர்ப்பாயத்திடம் அளிக்க விரும்பினால் அதன் இணைய தளத்தில் ‘விண்ணப்பம்’ என்ற பொத்தானை சொடுக்கி விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்யலாம்
உங்களுடைய விண்ணப்பத்துடன் உங்களுடைய வேண்டுகோளுக்கு ஆதாரமாக கீழ்க்கண்ட ஆவணங்களையும் இணைக்கவேண்டும்

சேவைக்குறைபாடு பற்றி வங்கிக்கு நீங்கள் தெரிவித்ததற்கு வங்கி வழங்கிய சான்று
உங்களுடைய வங்கிக்கணக்கு புத்தக பாஸ் புத்தகத்தின் நகல்- அடையாளத்திற்கான சான்றாக
வங்கிக்கு அவற்றின் சேவைக்குறைபாட்டினை நீங்கள் தெரிவத்ததற்கான நகல்
வங்கிக்கு நீங்கள் சேவை குறைபாடு பற்றிய விண்ணப்பம் குறித்து நீங்கள் வங்கிக்கு நினைவூட்டியதற்கான சான்று
உங்களுடைய முறையீட்டுக்கு ஆதாரமாக இருக்கும் எந்தவொரு ஆவணமும்
வங்கிகள் தீர்ப்பாயத்திடம் நீங்கள் உங்களுடைய விண்ணப்பத்தினை நேரிலோ அல்லது உத்திரவாத அட்டை இணைக்கப்பட்டு விரைவு அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்
 
இணையம் மூலம் வங்கிகள் குறை தீர்ப்பாயத்திற்கு விண்ணப்பித்தல்

இணையம் மூலம் வங்கிகள் தீர்ப்பாயத்திற்கு விண்ணப்பிக்க கீழ்க்கண்ட இணையதள முகவரியினை சொடுக்கவும்
குறையினை தெரிவிப்பதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்தவுடன் உங்களுடைய வங்கியின் சேவை குறைபாட்டிற்கான ஆதாரத்தினை இணைக்கவும். இது பிடிஎப் அல்லது டெக்ஸ் பார்மெட்டாக இருக்கவேண்டும்
உங்களுடைய விண்ணப்பத்துடன் மேற்கூறிய ஆவணங்களையும் இணைக்கவும்
நீங்கள் உங்களுடைய விண்ணப்பத்தினை மின்ணணு அஞ்சலாக வங்கிகள் குறை தீர்ப்பாயத்திற்கு அனுப்பலாம்
வங்கிகள் குறை தீர்ப்பாயத்தின் மின்ணணு அஞ்சல் முகவரியினை தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.
 
Operation of Banking Ombudsman
C/o Reserve Bank of India,
Fort Glacis,
Chennai 600 001
Tel No.(044) 2539 9170 / 25395963
/ 2539 9159
Fax No.044-25395488

News

Read Previous

தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம்களின் பங்கு

Read Next

ஏற்பது இகழ்ச்சி அல்ல!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *