விதை நெல்

Vinkmag ad

வேலிக்கு வேலி வைத்தோம்
வீதி எல்லாம் அணைக்கட்டு அமைத்தோம்
ஆணியில் ஏர்பிடித்து அடிவானம் பார்த்துவிட்டு
ஆடியில் விதைக்க வேணும்
விதைப்பதற்கு நெல் வேணும்
விளைவதற்கு மழை வேணும்
மானதுராச மானாபிமானம் பார்க்கணும்
வெள்ளமா
மடைதிறந்த
மழை இங்கு பெய்யணும்
மாதமோ ஆணியசி மழையே இல்லாம போச்சு
நேரம் நகர்ந்து நாழி கழிந்தது
காலமதுள் கணிந்ததுவே
வெண்ணிற வானும் நீளம் பாவ
வெள்ளி முளைச்சது இல்லாம போகா
காலத்து மேட்டுல நின்ன கதிரேசன்
கார்மேக தாய்  – கண்டு
குதூகலமாக கூக்குரலிட்டான்
எழெய் இலமாரா
மானராச மனமிங்குகிறான்
மாரியாய் பொழியப்போறான்
பசுவையும் கன்றையும் பக்குவமா
கட்டிப்போட்டு அடைக்கோழி கூட்டையும்
பத்திரமா மூடிப்போட்டு
வாய்க்கால வாரி வாறன்
வந்த தண்ணி வயலில் பாய
சீரா செம்ம செஞ்சி
சிறுதி நாழி வந்துடறேன்
ஓட்டமும் நடையுமாய் காடு சேர்ந்தான்
பகற்பொழுதை இருள வாய்த்த கார்மேகம்
பட்டென சிந்தியது ஒஅர் துளி
அதனை துரத்தியே அடுத்தொரு துளி
துளியும் கூடிட வெள்ளமாநதி
துயர்ந்த வெள்ளமது விட்டேனா
பாரென்று அல்லும்பகளுமாய்
பெயதோய்ந்தது பாத்து நாளாய்
ஈரசொற்றை மங்கலையில் ஊற்றி
வெற்றிலை களிப்பாக்கோடு சுண்ணாதையும்
மராதேடுது கடைவாயில் இட்டு கொஞ்சம்
மடியோரம் செருகிக்கொண்டு
கலப்பையை தொலேட்ட்ரி
கல மேடு புறபட்டான் கதிரேசன்
நூற்றாண்டாய் தார் கானா சாலையை
நல்ல சமதலமாய் நீர் மேவி காட்ட
தேம்மங்க்தை நடந்து வந்தவன்
திடுமென பாய்ந்தான்
மூனடிப் பள்ளத்திலே முகம் குப்புற
மூதேவிப் பயளுக்த ஜெயிச்சி வந்து
சிமென்ட் ரோஅடு போடரேனு
சிரிச்சி பேசி ஒஅட்டு வாங்கி
சிம்மாசனம் ஏறினாங்க
செம்மன்னுக்குமா வழியில்லை
புலம்பி தீர்த்து எழுந்துனடந்தான்
நல்ல வேலை எவனும் பார்க்கலை
என்று தன்னைத்தானே தேத்ரிக்கொண்டு
எட்டுக்களை எதி வைத்து காடு சேர்ந்தான்
மூச்சிரைக்க காடு நோக்கி ஓடிவந்த
இலமாரனை கைப்பிடித்து நிறுத்தி
என்கேஎடா ஓடியாற இந்த சக்தி காட்டுல
பாதைஇருக்குற சீராட்டுல
பள்ளம்மேட்டுல பாய்ந்சிபுட்டா
பதம் பார்க்கிறது ஆருட உன்னை
என்று கூறி இறைந்து வந்த காரணம்
என்னவென்று கேட்டான் கதிரேசன்
மம்ம்பான வெதநெல்ல மழை தண்ணி தின்ருடுசி
மம்ம்பான நமத்திடுசி
மடி விழுந்த பேரிடியா
மகன் பிள்ள சொன்னது வுரைக்க
நாலாருமாசமா சேத்துவெச்ச வேதநேல்லு
முத்த்ன்றும் மனிஎன்ரும் மூடி வெச்சது
கடும்பஞ்ச பட்டினியாலும் பாதுகாத்து
காலணா தேராமப் போச்சு
கவலையில் சரிந்தான் கதிரேசன்
எங்கேனு போய்க் கேட்பேன்
எப்படின்னு விதை விதைப்பேன்
பாலை போன வூர்பைய
பத்துகாசு தரமாட்டான்
படாதபாடு பாடு பக்கத்துக்கு வூரு
பண்ணையார்ட்ட பழைய பழக்கத்திலே
பண்ண முதிஞ்சது ஒரு நூற்றம்பது
ஒலிம்பிக்ல ஜெயிச்ச சந்தோஷம்
ஒடோநினான் டவுன் சந்தைக்கு
வேத நெல்லு படி என்ன?
மட்ட நெல்லுஇ சம்பாநேல்லு
ஐயார் இருபதுஇ ஐயார் அம்பது
ஒன்ன வாங்க்சி வந்தான்
வோய்யாரமா விதை விதைச்சான்
ஓடி ஓடி கழலை பறிச்சான்
அறைசான் பயிரானது
அடியளவாய் ஓங்கி எழுந்து
வளர்த்த எசமானனையும்- நீர்
வார்த்த செவ்வானையும் பார்த்து சிரித்தது
நெல்லது பச்சை நிறம் கொண்டு
நிறைவான பால் பிடித்து நின்றது
நேர்போதி பரியும் நேரம்
நெடுவயலில் நீர் பாய வேணும்
நெடுவானம் தந்த நீரில்
ஊர்க்கன்மாய் வுடைந்து போனதால்
வாய்க்கால் வடிகால் வரைந்து இருந்தது
மாணிக்கம் கிணறும் தூண்டு கிடக்கு
பச்சைபயிர் பச்சைக்கில்லையாய்
பாச பார்வை பார்த்தது நீர் வேண்டி
முகட்டில் போர்த்திய கோரைப்பாய் போல்
முகத்தில் கிடந்த முதுமை கோடுகளை
கதிரேசனின் கண்ணீர் துளிகள் மூடின
கண்ணீர் துடைத்து வானம் பார்த்தான்
அசைவற்று கிடந்தது அடிவானம்
பொழுதுகளோ கடந்து கொண்டு இருந்தது
பேய் மழையின் மீதும் நம்பிக்கை இழந்தான்
நடைவேகம் குறைந்தான்
பசிதாகம் அடைக்கினான்
நாள் குறித்தான் சாவி அறுக்க
தலைப்பாகையை கையில் எடுத்து
இடுப்பிலே கட்டி கடவுளை
வேண்டி கதிர் அறுத்தான்
சிந்தி சிதறியது போக நெல்லு மூட்டை
ஒன்னரையும் மூணு மரக்காலும்
ஒத்தாசை செய்தவனுக்கு
கொடுத்து மீதமதை வைத்து
நிமிந்தான் கடன் தந்த பண்ணை
நெல் மூட்டை ஒன்றை எடுத்து
வட்டிக்கு முதலுக்குமாச்சி
என்று சொல்லி கிளம்பினான்
கையிருப்போ ஆறு மறக்கானால்
கைப்பிடியை தலை ஏற்றி
பேரன் இலமாரனுடன்
பேசிக்கொண்டே வீடு சேர்ந்தான்
கருதருத்த பின்னாடி புதுத்துணி
வாங்கித்தாறேன்னு சொன்னியே தாத்த
அப்பாவியாக் கேட்டான் இளமாறன்
அடுத்த விதைப்புக்கு நெல்லு வேணும்
ஐயா ராசா அதுவரை பொறுத்திரு
என்று பேரனுக்கு சமாதானம் கூறி
விதே நெல்லை பத்திரப்படுத்தினான்
ஏழை சம்சாரி கதிரேசன்

முதுவை சல்மான்
ரியாத்
salmanhind007@yahoo.co.in

admin

Read Previous

சட்டம் ஒழுங்கு

Read Next

எது இனிது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *