முதுகுளத்தூரில் வட்டார அளவிலான சதுரங்கப்போட்டி

Vinkmag ad

முதுகுளத்தூர் ஸ்ரீ கண்ணா மெட்ரிக் பள்ளியில் 11,14,17,19 வயதிற்குள்பட்ட மாணவ,மாணவிகளுக்கு வட்டார அளவிலான சதுரங்கப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற இப்போட்டியை காவல்துறை துணை கண்காணிப்பாளர் கணபதி தொடக்கி வைத்தார்.சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் எம்.முருகன் தலைமை வகித்தார். வட்டாட்சியர் எஸ்.ஆர்.கணேசன், ஸ்ரீகண்ணா மெட்ரிக் பள்ளி நிறுவுனர் கே.காந்திராஜன், சிக்கல் இந்தியன் மெட்ரிக் பள்ளி நிறுவனர் ரபீக் முகமது,பள்ளிவாசல் பள்ளி தலைமை ஆசிரியர் சுலைமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்ற மாணவர்கள் விவரம்: 11 வயதிற்குள்பட்ட ஆண்கள் பிரிவில் சிவபுரம் ஆஞ்சநேயா பள்ளி மாணவர் எம்.கிஷோர்ராஜன், கருமல் டி.இ.எல்.சி பள்ளி மாணவர் எஸ்.மணிகண்டன். 14 வயது பிரிவில் மலட்டாறு வி.வி.எஸ்.எம் பள்ளி மாணவர் வி.துரைவடிவேல், சிக்கல் இந்தியன் மெட்ரிக் பள்ளி மாணவர் ஏ.இம்ராம்கான். 17 வயது பிரிவில் சாயல்குடி பள்ளி மாணவர் எம்.வாஞ்சிநாதன்,முதுகுளத்தூர் பள்ளிவாசல் பள்ளி மாணவர் எஸ்.ரிதன்குமார். 19 வயது பிரிவில் முதுகுளத்தூர் பள்ளிவாசல் பள்ளி மாணவர் எஸ்.காதீர் முகைதீன், சிக்கல் அரசு பள்ளி மாணவர் எம்.ரிஷ்வன். பெண்கள் பிரிவில் 11 வயதிற்குள்பட்ட பிரிவில் பெரியகையகம் பள்ளி மாணவி எம்.அர்ச்சனாதேவி,கண்ணா மெட்ரிக் மாணவி எம்.சுபிக்ஸா. 14 வயது பிரிவில் முதுகுளத்தூர் பள்ளி மாணவி, பி.சுகந்த ப்ரீத்தி, ஸ்ரீகண்ணா பள்ளி மாணவி எஸ்.ஜனனி. 17 வயது பிரிவில் முதுகுளத்தூர் பள்ளி மாணவி ஏ. அப்ஷரா ஷியானா, சிக்கல் பள்ளி மாணவி எஸ்.ப்ரியதர்ஷினி.

19 வயது பிரிவில் மலட்டாறு வி.வி.எஸ்.எம்.பள்ளி மாணவி எம்.கல்கி, முதுகுளத்தூர் பள்ளிவாசல் பள்ளி மாணவி எஸ்.சபீனா. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ்.பிரசாத் பாராட்டினார்.

News

Read Previous

கொலஸ்டிரால்

Read Next

விளாம்பழம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *