சிறப்பு பயிற்சி முகாம்

Vinkmag ad

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலகத்தில், நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் களப்பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம், உதவி திட்ட அலுவலர் பரமசிவம் தலைமையிலும், உதவி இயக்குநர் பவுன்ராஜ் (பொறியியல் துறை) முன்னிலையிலும் நடந்தது. ஊராட்சிகளில், நூறு நாள் வேலைத்திட்டத்தில், பயனாளிகளின் பணி, வருகை பதிவேடுகளை பராமரிக்கும் 160 பணியாளர்களுக்கு, நூறு நாள் வேலைத்திட்டத்தின் பணிகள், அதன் அளவுகள் குறித்து, பி.டி.ஓ., க்கள் ரவிச்சந்திரன், செந்தூர்பாண்டியன் பயிற்சி அளித்தனர். உதவி பொறியாளர்கள் அருண்பிரசாத், மகிழமுத்து, ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை துணை பி.டி.ஓ., தங்கபாண்டியன் செய்திருந்தார்.

News

Read Previous

தீபாவளி பட்டாசும்-அக மகிழ்வும்

Read Next

டாக்டர்கள் பற்றாக்குறையால் சிகிச்சைக்கு சிக்கல் வெளியூர்களுக்கு பரிந்துரைப்பதால் கூடுதல் செலவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *