பூங்காவும் பொன் எழுத்துக்களும்

Vinkmag ad
IMG_1697கல்கத்தாவில் இருந்தபோது தெற்கு கல்கத்தா லேக் ஏரியாவில் உள்ள லயன் சஃபாரி பூங்காவுக்கு ஒரு மாலையில் உலாவச் சென்றேன். பல வகை மரங்களும், செடிகளும், நடைபாதைகளும் கொண்ட பரந்து விரிந்த பூங்கா. சிறுவருக்கான விளயாட்டுப் பகுதி சிறப்பானது.
அக்குபிரசர் நடைபாதை கவர்ந்தது. 5 நிமிட நேரம் வெறுங்காலில் அதில் தினம் நடைப்பயிற்சி செய்தால் எல்லாவித நோய்களும் நீங்கும் என்று அங்கிருந்த அறிவிப்புப் பலகையில் போட்டிருந்தது.
IMG_1701
என்னை மேலும் கவர்ந்தவை அங்கிருந்த நடைபாதையின் பக்கச் சுவரில் வரிசையாகப் பதிக்கப்பட்டிருந்த சலவைக் கற்பலகைகளில் பொறிக்கப்பட்டிருந்த பொன் எழுத்துக்கள்.
மனம், பணம், மனிதம், உடல் நலம், வாழ்வு பற்றிய கருத்துக்களை அவை எண்ணிப்பார்க்க வைத்தன.
மனக் கவலை மாற்றுவதற்கும், மகிழ்ச்சி, வெற்றி, ஆரோக்கியம், முதுமை நலம் பெறவும் அந்தச் சொற்களை அசைபோட்டுக்கொண்டு நடந்தால் போதும்.
நண்பர்களும் எண்ணிப்பார்க்கவும் தங்கள் எண்ணங்களைப் பதிவிடவும் வேண்டி இங்கே அந்தச் சிறந்த சொற்களின் படங்களைப் பகிர்ந்துள்ளேன்.
வாழ்த்துக்களுடன்
சொ.வினைதீர்த்தான்.

News

Read Previous

படித்தலும் படைத்தலும் எவருக்கும் பொது..

Read Next

துபாயில் உணர்வாய் உன்னை தன்னம்பிக்கை பயிற்சி முகாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *