பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்

Vinkmag ad

படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை “மருத்துவ திறவுகோல்’ என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.

கம்பளிப் படுக்கை – குளிருக்கு இதம். குளிர் ஜுரம் நீங்கும்.

கோரைப் பாய் – உடல் சூடு, மந்தம், ஜுரம் போக்கும். உடலுக்கு குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.

பிரம்பு பாய் – சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.

ஈச்சம் பாய் – வாதநோய் குணமாகும். உடல்சூடு, கபம் இவை அதிகரிக்கும்.

மூங்கில் பாய் – உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.

தாழம் பாய் – வாந்தி, தலைசுற்றல், பித்தம் நீங்கும்.

ஈச்சம் பாய் – வாதகுன்ம நோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.

இலவம்பஞ்சு படுக்கை – உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.

மலர்ப் படுக்கை – ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.

ரத்தினக் கம்பளம் – நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.

இது தவிர இப்படியும் பயன்படுகிறது பாய். பனை ஓலை பாய் பல சரக்கு வெல்ல மண்டிகளில் சரக்குகளை கையாளப் பயன்படும். மூங்கில் தார்பாய் வீடு, அலுவலகங்களில் தடுப்புச் சுவர் மற்றும் கோடை வெப்ப தடுப்பானாகவும் பயன்படும். நாணல் கோரைப் பாய் மக்கள் பயன்படுத்தும் எளிமையான படுக்கை விரிப்பாகும்.

News

Read Previous

இந்திய விடுதலை நாள் சிந்தனைகள்

Read Next

மதுவைத் தொடாதே !

Leave a Reply

Your email address will not be published.