தினமும் ஆப்பிள் சாப்பிட்டால் புற்றுநோய் தடுப்புத் திறன் 5 மடங்கு அதிகரிக்கும்

Vinkmag ad

பிரஸ்ஸல்ஸ்: தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவோர் புற்றுநோயிலிருந்து 35 சதவீதம் வரை பாதுகாப்பு பெறுகிறார்கள். தினசரி ஒன்றுக்கு மேல் ஆப்பிள் பழம் சாப்பிடுகிறர்களுக்கு 50 சதவீத பாதுகாப்பு கிடைக்கிறது. ஆப்பிள் பழத்தின் தசைப் பற்றான பாகத்தைவிட அதன் தோல் 5 மடங்கு புற்றுநோய் எதிர்ப்பு திறன் பெற்றுள்ளது என போலந்து நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

போலந்து விஞ்ஞானிகளின் ஆய்வினையும் அதன் கண்டுபிடிப்புகளையும் விளக்கும் கட்டுரை “கான்சர் பிரிவென்சன்Ó இதழில் பிரசுரம் ஆகி உள்ளது. அந்த ஆய்வுக்கட்டுரை விவரம் வருமாறு:

ஆப்பிள் பழம் உடல் நலனையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது என்ற கருத்து உலகமெங்கும் பரவி உள்ளது. தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுகிறவர் தன் வீட்டுக்கு மருத்துவர் வரவிடாமல் தடுத்துவிடுகிறார் என்றும் கூறப்படுகிறது. மருத்துவமனையில் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகள் 592 பேரைப் பேட்டி கண்டு போலந்து விஞ்ஞானிகள் பேசினர்.

அந்த புற்று நோயாளிகளின் உணவுப் பழக்கங்கள் குறித்தும் விசாரித்து அறிந்தனர். மருத்துவ மனையில் வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறும் புற்று நோய¢ பாதிக்காத 765 நோயாளிகளையும் அவர்கள் கண்டு பேசினார்கள்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு வார காலத்தில் 9.5 முறை ஆப்பிள் பழத்துண்டுகள் சாப்பிட்டதாகக் கூறினார்கள்.

புற்று நோயால் பாதிக்கப்படாதவர்கள் ஒரு வார காலத்தில் 11 முறை ஆப்பிள் துண்டுகள் சாப்பிட்டுள்ளனர். தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுவோர் 35 சதவீத பாதுகாப்பை பெறுகிறார்கள். ஒரே நாளில் ஒரு பழத்துக்கு மேல் ஆப்பிள் சாப்பிட்டவர்கள் 50 சதவீதத்துக்கு மேல் பாதுகாப்பை பெறுகிறார்கள். இத்தகைய பாதுகாப்பை மனிதர்களுக்கு வழங்குவது ஆப்பிள் பழத்தில் உள்ள ஃபிளாவினாய்ட்ஸ் என்ற சத்துப் பொருள்தான்.
இந்த சத்துப் பொருள் ஆப்பிள் தோலிலும் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஆப்பிள் பழத்தின் தசைப்பற்றான பகுதியைவிட தோலில் 5 மடங்கு அதிகம் ஃபிளாவினாய்ட்ஸ் உள்ளன. எனவே ஆப்பிள் பழத்தை நன்றாகக் கழுவிவிட்டு சாப்பிட வேண்டும். தோலை சீவி எறிந்துவிட்டால் ஆப்பிள் பழம் தரும் கான்சர் பாதுகாப்பு உரிய அளவில் கிடைக்காது என ஆய்வாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.

admin

Read Previous

என்னவள் பிறந்தபோது

Read Next

இஸ்லாமிய‌ இளைஞ‌ர்க‌ளுக்கு ஆட்டோ தொழிற் கூட்டுற‌வு ச‌ங்க‌ங்க‌ள் மூல‌ம் ஆட்டோ வாங்க‌ க‌ட‌ன் வ‌ழ‌ங்கும் திட்ட‌ம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *