சிறுநீர்ப் பாதை தொற்றை தவிர்க்க அருமருந்தாகும் தண்ணீர்!

Vinkmag ad
சிறுநீரக தொற்று குறித்து விளக்கும், பெண்கள் சிறப்பு மருத்துவர் டாக்டர் கலைவாணி ராமலிங்கம்: ‘இகோலை’ என்ற கிருமிகள், எப்போதுமே குடலில் இருக்கும். சிறுநீர்ப் பாதையில் சுத்தமின்மை, தண்ணீர் போதிய அளவு குடிக்கவில்லை என்றால், அந்தக் கிருமிகள், கிட்னிக்கு உள்ளே போகிற அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சுகாதாரம் சரியில்லாத காரணத்தால், பெண்கள், சிறுமியர் சிறுநீர் கழிப்பதை தவிர்ப்பதால், ‘யூரின் இன்பெக்ஷன்’ ஏற்படுகிறது.

உடல் ரீதியாக, ஆண்களின் சிறுநீர் பைக்கும், அது வெளியேறுகிற துவாரத்திற்குமான இடைவெளி, 15 செ.மீ., என்றால், பெண்களுக்கு அது வெறும், 4 செ.மீ., மட்டுமே.

அதனால், மிகச் சுலபமாக கிருமிகள், பெண்களின் சிறுநீர் பையைத் தாக்குகின்றன. நம் உடலில் மிக முக்கியமான பகுதி சிறுநீரகம். ரத்தத்திலுள்ள, ‘டாக்சின்’ என்ற கெட்ட ‘சப்ஸ்டசன்ஸ்’ யூரின் வழியாக வெளியேற்றும் பணியைச் செய்கிறது. அதற்கு, நம் உடம்பில் இருக்கக் கூடிய ரத்தத்தில், 25 சதவீதம் ரத்தம் கிட்னிக்குள் செல்கிறது. கிட்னியில் இன்பெக்ஷன் ஏற்படும்போது, அது உடனடியாக ரத்தத்தில் பரவி, ‘செப்டிசீமியா’ என்ற கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சிறுநீரகக்கல் இருந்தாலும், யூரினரி இன்பெக்ஷன் வரலாம். போதிய தண்ணீர் குடிக்காதது தான், யூரினரி இன்பெக்?ஷன் வர முக்கிய காரணம். முதல் கட்டமாக, ஒரு நாளைக்கு, 2 லிட்டர் தண்ணீர், அதாவது, 8-10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். வெறுமனே தண்ணீர் குடிக்க கஷ்டமாக இருந்தால், பாலாக அல்லது மோராக, நீராகாரமாகக் குடிக்கலாம். அதுமட்டுமின்றி, இன்று பெரும்பாலானோர், தண்ணீர் குறைவான, ‘ட்ரை’ உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால், உணவிலிருந்து கிடைக்கும் தண்ணீர் மிகவும் குறைந்துவிட்டது. எனவே, நேரடியாகத் தண்ணீர் அருந்தினால் தான், இந்த யூரினரி இன்பெக்ஷனை தவிர்க்கலாம். அடிக்கடி தண்ணீர் குடித்தால், சிறுநீர்ப்பையில் இருக்கும் கிருமிகள் வெளியேறிவிடும்; தொற்று ஏற்படாது. அடிக்கடி சிறுநீர் கழித்தல், எரிச்சல், அடக்க முடியாத நிலை போன்றவையே, யூரினரி இன்பெக்ஷனுக்கான அறிகுறிகள்.
உடனே மருத்துவரைப் பார்த்து, எத்தனை நாட்கள் மருந்து, மாத்திரை கொடுக்கின்றனரோ, அதை முழுமையாகச் சாப்பிட்டால் தான், அந்தக் கிருமி முழுமையாக உடம்பிலிருந்து போகும். மருந்து, மாத்திரைகளைப் பாதியில் நிறுத்தினால், திரும்பத் திரும்ப யூரினரி இன்பெக்ஷன் வந்துவிடும். இன்பெக்ஷன், ‘பிளாடர் யூரிஸ்ரா’ என்ற கீழ்நீர்ப்பாதை மட்டுமல்லாமல், மேல்நீர்ப்பாதையிலும் பாதித்து, அங்கிருந்து நீரை எடுத்து வரும், ‘யூரிடர்’ என்ற ‘டியூப்’ மூலம், சிறுநீரகத்துக்கும் போய்விடும்.

News

Read Previous

ஆதார் மற்றும் நேரடி சமையல் எரிவாயு மானியம் (DBTL) திட்டம் பற்றிய விபரங்கள்

Read Next

ஓய்வுபெற்ற அதிகாரி, வக்கீல் மோதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *