லேம்ப்டன் சிகரம்

Vinkmag ad

Lambtons peak.jpeg

லேம்ப்டன் சிகரம் (Lambtons peak)
கோவை நகரத்தின் மேற்கு அரணாகச் செல்லும் நீண்ட மேற்குத் தொடர்ச்சி மலைகளைக் கவனித்திருக்கிறீர்களா!?. அதில் ஒரு சிகரம் கட்டைவிரலை வளைத்து தம்ஸ்அப்  காட்டுவது போலிருக்கும். அதுதான் லேம்ப்டன் பீக். இது எங்கிருக்கிறது? வெள்ளக்கிணர், துடியலூர் பகுதிகளிலிருந்து சில  கிமீ தொலைவில் இதை அடையலாம். இதே மலைப் பகுதியில்தான் குருடி மலை(குரு_ரிஷி ?) உள்ளது.
யார் இந்த லேம்ப்டன்?
இவர் இந்தியாவின் முதல் சர்வேயர் ஜெனரல்.
Great meridional arc என்ற , நில அளவைக்கான அடிப்படைக் கோட்டை வரையத் துவங்கியவர்(1802). அதை ஆங்கிலத்தில் trigonometrical survey என்பர். நிலங்களைப் பல முக்கோணங்களாகப் பிரித்து அளவை செய்வர். இந்த நில அளவைகளுக்கு அடிப்படையான கோடுதான் Great meridional arc. முசோரியில் இருந்து கன்னியாகுமரி வரை வரையப்பட்டது. இந்தப் பெருமுயற்சியின் இடையில் லேம்ப்டன் காலமாகிவிட ஜார்ஜ் எவெரெஸ்ட் பொறுப்பு ஏற்றார். உலகின் உயர்ந்த சிகரமான எவெரெஸ்ட் இந்த சர்வே யின் விளைவாகவே கண்டுபிடிக்கப்பட்டது. ஜியார்ஜ் எவெரெஸ்ட் நினைவாக அந்த சிகரத்துக்குப் பெயர் வைக்கப்பட்டது போல், இந்த மாபெரும் பணியின் முன்னோடி லேம்ப்டன் இந்த பகுதியில் பணியாற்றியதால்(1806 வாக்கில்) இந்த சிகரத்துக்கு இவர் பெயர் சூட்டப்பட்டது
இந்த மாபெரும் பணியில் ஈடுபட்டபோது(ஏன் உயிரிழப்புக்கள் கூட) நடந்த சம்பவங்களையும், சிரமங்களையும் திரு ரமணன் அவர்கள் தனது “கடைசிக்கோடு” என்னும் நூலில் சுவை படக்கூறியிருப்பார்.
புகைப்பட உதவி: திரு. சுபாஷ் சுந்தரம்

News

Read Previous

கௌதம சன்னாவின் இட ஒதுக்கீட்டின் மூலவரலாறு

Read Next

கொங்கு தமிழில் திருக்குறள் விளக்கம்

Leave a Reply

Your email address will not be published.