கொய்யா இலை

Vinkmag ad

100 கிராம் கொய்யா இலையில் இவ்வளவு இருக்க!!!!!!!

கொய்யா இலையில் உள்ள புரதச் சத்துக்கள்

100 – கிராம் கொய்யா இலையில் புரதம் – 2.55 கிராம் , வைட்டமின் B6 – 0 . 11 மி . கி , கோலைன் 7.6 . வைட்டமின் சி – 228.3 மி . கி கால்சியம் – 18 மிகி இரும்பு 0.- 25 மி . கி . , மெக்னீசியம் – 22மி . கி மாங்கனீசு – 0.15மி கி பாஸ்பரஸ் 40 மி . கி , பொட்டாசியம் – 417 மிகி சோடியம் – 2 மிகி துத்தநாகம் – 0.23 மி . கி ஆகியன அடங்கியுள்ளது * கொய்யா இலையைக் கொதிக்க வைக்க வைத்து சிறிதளவு துளசியும் இஞ்சியையும் சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டி குடித்து வந்தால் மூச்சுக்குழல் அலர்ஜி நீக்கும்

கொய்யா இலையின் பயன்கள்

* செரிமான கோளாறு உள்ளவர்கள் ஐந்து கொய்யா இலையையும் கொஞ்சம் சீரகமும் சேர்த்து கொதிக்க வைத்துப் பருகினால் உடனடியாக வயிறு உப்புசம் குறைந்து உணவு சீரணமடையும் .

* கொய்யா இலைகளின் சாற்றை அருந்தும்போது நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது . இது நீரிழிவு நோயாளிகளின் இன்சுலின் சுரப்பியினைத் தூண்டி சுக்ரோஸ் மற்றும் மால்டோஸ் உள்ளீர்ப்பை தடுக்கிறது , மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது .

* ஒரு பாத்திரத்தில் 4 டம்ளர் அளவு நீரை ஊற்றி அதில் 5 இலைகளை போட்டு கொதிக்க வைக்க வேண்டும் . அது கொதிக்கும்போதே அதனுடன் சிறிதளவு இஞ்சி , டீத்தூள் , ஏலக்காய் , சீரகம் போன்றவற்றை போட்டு கொதிக்க வைத்து , தேவையான அளவு நாட்டு வெல்லம் சேர்த்து இறக்கினால் கொய்யா இலை டீ ரெடி நன்றாக வடிகட்டி காலை , மாலை இருவேளையும் அருந்தலாம் . ” கொய்யா இலையை தேநீராக உட்கொள்ளலாம் . அவ்வாறாக உட்கொள்ளும்போது உடல் எடை குறைகிறது . இதில் நார்ச்சத்து மிகுந்து உள்ளதால் உடலில் அதிக கொழுப்பு உற்பத்தியை தடுக்கிறது .

* உடல் எடை அதிகம் கொண்டவர்கள் கொய்யா இலை தேநீர் அருந்துவதன் மூலம் எடையைக் குறைக்க முடியும் . உடலில் கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது .

* கொய்யா இலை சாறில் அமிலேஸ் ( Amylase ) நொதியை உற்பத்தி செய்யக்கூடிய தன்மை இருக்கிறது . பல் வலி ஈறுகளில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் வாய்ப்புண் போன்றவற்றை குணப்படுத்துகிறது .

* ஆண்மைக் கோளாறு பிரச்னை உள்ளவர்கள் கொய்யா இலை தேநீரைத் தொடர்ந்து அருந்தி வந்தால் நல்ல பயன் கிடைக்கும் ,

* விந்தணு உற்பத்தியை அதிகப்படுத்துகிறது மூலவர்ச்சிக்கு உதவுகிறது . இருமல் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களுக்கு நல்ல தீவினைத் தருகிறது

* கொய்யா இலையில் கஷாயம் செய்து தொடர்ந்து குடித்து வந்தால் , உதிரப்போக்கு தடைபடும் மேலும் தைராய்டு சுரப்பு சமநிலைக்கு வரும்.

* கல்லீரலை சுத்தம் செய்கிறது . கொய்யா இலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் புற்றுநோய் கட்டி வளர்ச்சிகளை தடுக்கிறது.

News

Read Previous

ஹைக்கூ

Read Next

கலைச் சொற்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *