கூட்டுப் பொருளாதாரமும் சமுக மாற்றமும்

Vinkmag ad

கூட்டுப் பொருளாதாரமும்  சமுக மாற்றமும்:-

 

பண்பாட்டுரீதியாக பொருளாதார சிந்தனை என்பது சமூகத்தைப் பற்றிய சிந்தனையிலிருந்து தனியானதாக பிரிக்க முடியாது, ஆனால் இன்று முதலாளித்து சிந்தனை சமூகம் சார்ந்தது அல்ல, உற்பத்தி சார்ந்த அடிமை முறை. அதாவது, ஒரு வேலையிலிருந்து பிரிவோ, அல்லது வெளியேற்றப்பட்டாலோ, அந்த தொழிலாளி ஒரு பகுதி வேலையோடு ஆயுட்காலம் பினைந்து அவரை மூலதனத்துக்கு முழுமையாகக் பயன்படுத்தப்பட்டு பின்னர் பழைய இயந்திர ஸ்கிராப் போல் வெளியேற்றுவது இன்றைய முதலாளித்துவ சித்தாந்தம், இதுவே தற்போதைய நவின முதலாளித்துவ கல்விமுறை, இது நமது பண்பாட்டு வழிமுறை அல்ல.

 

இங்கு மாத ஊதியத்தில் பணியற்றுபவரின் நிலையோ எண்ணெய்ப் பசையில் கால்கள் சிக்கிக்கொண்ட ஒரு பல்லியின் செயலற்ற நிலை எப்படியே”- அப்படிதான் தற்போது நிலை. ஆனால் பன்னாட்டு நிறுவனமோநீருக்கு மேலே ஒரே இடத்தில் சிறகடித்து நிற்கும் மீன்கொத்தியின் லாவகம்போலவும், இயற்கை வளங்களையும், பண்பாட்டையும் அழிக்க துடிக்கின்றது.

 

கடந்த கால வரலாற்றில், தமிழர் கடல் பிராந்தியம் முழுவதும் 3000 ஆண்டுகால ஏற்றுமதி இறக்குமதி  வணிகம் செய்த மிக நெடிய வரலாறு தமிழகத்துக்கு உண்டு. அதில் 700 ஆண்டுகாலம் சோழ மண்டலக் கடற்கரை முழுவதும் தமிழக முஸ்லிம்கள் இந்த தமிழர் கடல் பிராந்தியத்தில் வாணிபம் கோலோச்சு இருந்தனர், ஆனால் காலனித்துவ ஆதிக்கம், அரசியல் மாற்றம் மற்றும் கல்வியின் வீழ்ச்சால் புதிய தொழில்நுட்பத்தை உள்வாங்காதால் பின்னடைவுக்கு சென்றனர்.

 

நமக்கான பொறுப்புகள் என்ன என்பது அறிந்து கொள்ளாத, பன்னாட்டு நிறுவனத்தின் பண்பட்ட அடிமையாய் மாத வருவாய் ஈட்டுபவர்களாக மாறிவிட்டோம், சமூகத்தை பற்றிய தொலைநோக்கு பார்வையில்லாததால், இந்த நகர்வு இப்போது பிரச்சினைகள் இல்லாதது போல் தெரியும், ஆனால் அது அடுத்த தலைமுறைகள் சமூக அதிகாரத்திலும், பொருளாதாரத்திலும் ஒரு வலுவான கட்டமைப்பை பெறாது.

 

மீண்டும் வாணிபத்தில்  கோலோச்ச, மிகுந்த போட்டி நிறைந்த வணிக உலகில், பன்னாட்டு நிறுவனங்கள், தனியார்மயமாக்கல் இவைகளுக்கு இடையில் தனியாகவோ அல்லது சிறு முதலீட்டில் ஒரு தொழிலை வெற்றிகரமாக நடத்துவது இயலாதது, இவைகளை எதிர்கொள்ள நாம் சமூகம் சமூகமாக கூட்டு பொருளாதாரம், / கூட்டு முயற்ச்சி என்ற அடிப்படையில் சமூகமாக இனைந்து தொழிலில் ஈடுபட வேண்டும், தொழில் என்பது சமூகமாக செய்ய வேண்டிய முறைமை என்பதை மார்வாடிகள், சிந்திகள், மலையாளிகளை ,பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த நிலையில் தான் நாம் வணிகத்தை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும். கூட்டு சமூகமாக செயல்படும் போது அதில் உள்ள உறுப்பினர்கள் முதலீட்டாளர்களாகவும் தொழிலில் உழைப்பாளரகவும் செயல்படுவதால் இதில் அவர்களுக்கு இலாப நட்டத்தில் நேரடியாக பங்கு பெருவதால் அவர்களின் செயல்பாடுகள் மிகவும் செம்மையாக செயல்படும். இது ஒரு சமூகமாக செயல்படுவதால் நல்லினக்கமும், மற்றும் தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி நகரும், அப்பொழுதுதான் சமூகத்தை புணரமைப்பு செய்யமுடியும்.

 

வேளாண்மையை  ஒரு சமூகமாக கூட்டு முதலீட்டில் முன்னெடுத்து  செல்வது மகத்தான அபிவிருத்தியும் வாழ்வாதார பாதுகப்பும் தரும்.  இதன் மூலமே சமூகத்தின் மறுவாழ்விற்கும் , இளைஞர்களின் தொழில் வாய்ப்பை வழங்கவும், பல்லின சமூகத்தில் தற்சார்பு வளர்ச்சியடைந்திட , நசுக்கப்பட்டு வரும் உழவு தொழிலை உயர்த்திட, கலப்படம் இல்ல இயற்கை உணவு பெற்றிட , மரபனு மாற்றப்பட்ட(Genetically modified foods ) உணவிலிருந்து விடுபட்டு இயற்கையோடு வாழ இது வழி செய்யும். வாழ்க்கையின் உண்மையை உணர்ந்து இந்த வாழ்வை வரலாறாக மாற்றியமைப்போம்.

 

தனி மனிதனுக்கு எவ்வாறு நினைவாற்றல் முக்கியமோஅது போல தான் ஒரு சமூகத்திற்கு அதன் வரலாறு முக்கியம்

நூர் முகம்மது

 

 

 

 

News

Read Previous

மன உளைச்சல்

Read Next

முதுகுளத்தூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற வேட்பாளர் நவாஸ் கனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *