எப்போது எல்லாம் பான் கார்டு தேவை?

Vinkmag ad
வருமான வரி செலுத்தும் ஒவ்வொரு இந்தியரும் நிரந்தரக் கணக்கு எண் (PAN-Permanent Account Number) பெற்றிருப்பது அவசியம். இந்த பான் கார்டு எண் சில செயல்பாடுகளின்போது அவசியம் தேவைப்படுகின்றது.இந்த இடங்களில் பான் கார்டு எண் இருந்தால் மட்டுமே நம் வேலைகள் அங்கே பூர்த்தியாகும். எந்தெந்த செயல்பாடுகளுக்கு அவசியம் பான் கார்டு தேவை என்பதை இங்கே பார்க்கலாம்.

அவசியம் தேவை
* ஐந்து லட்சம் ரூபாய்க்குமேல் மதிப்புள்ள அசையாச் சொத்துக்களை வாங்கும்போதோ, விற்கும்போதோ பான் எண் தேவைப்படும்.
* ரூ.50,000 மதிப்பில் வங்கியில் சேமிப்புக் கணக்கு அல்லது வைப்பு நிதி ஆரம்பிக்கும்போது தேவைப்படும்.
* தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களில் கட்டணமாக 25,000 ரூபாய்க்குமேல் செலுத்தும்போது தேவைப்படும்.
* வெளிநாட்டு பயணச் செலவுக்காக 25,000 ரூபாய்க்குமேல் பணமாகச் செலுத்தும்போது தேவைப்படும்.
* வங்கியில் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கும்போது தேவைப்படும்.
* 50,000 ரூபாய்க்கு அதிகமான தொகையை மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, கடன் பத்திரங்கள் போன்ற முதலீடுகளில் முதலீடு செய்யும்போது தேவைப்படும்.
* காப்பீட்டுத் திட்டங்களுக்குச் செலுத்தும் பிரீமியம் 50,000 ரூபாய்க்குமேல் அதிகமாக இருக்கும்போது தேவைப்படும்.
* தங்கம், வைரம், வெள்ளி போன்றவை ஐந்து லட்சம் ரூபாய்க்குமேல் வாங்கும்போது தேவைப்படும்.
கறுப்புப் பணம் தடைபடும்
மேலே சொன்ன எல்லா செயல்பாடுகளின்போதும் அவசியம் பான் கார்டு எண் தேவைப்படுகிறது. இதுபோன்ற செயல்பாடுகளில் பான் கார்டுகள் அங்கம் வகிப்பதற்கு மிக முக்கிய காரணம் கறுப்புப் பணம் ஊடுருவுதலைத் தடை செய்வதற்காகத்தான்.
நமது அனைத்து பரிவர்த்தனைகளும் பான் கார்டு எண் மூலம் வருமான வரித் துறையால் கண்காணிக்கப் படும். இருப்பினும் இந்தச் செயல்பாடுகளில் பல தரப்புகளில் காணப்படும் அலட்சிய போக்கு காரணத்தால் இன்றைய நிலையில் கறுப்புப் பணம் களையப்படுவதாகத் தெரியவில்லை. இதற்கு இன்னொரு முக்கிய காரணம் லஞ்சம், கணக்கில் வராத வருவாய்.
பான் கார்டு இருந்தால்…
சரி, ஒருவர் பான் கார்டு வாங்கியதால், அவரும் வருமான வரி கட்ட வேண்டுமா என்றால், கிடையாது. நிதி ஆண்டில் வருமானம், தற்போதைய நிலையில் ரூ. 2.5 லட்சம் தாண்டும்போதுதான் வரி கட்ட வேண்டும். பான் கார்டு வைத்திருப்பதில் இன்னொரு நன்மை உண்டு. அதை அனைத்து அரசு மற்றும் அரசு சாராத நிறுவனங்களில் அடையாள அட்டையாகப் பயன்படுத்தலாம்

 

News

Read Previous

திருட்டை ஒழிக்க இஸ்லாம் ஒன்றே தீர்வு

Read Next

ஆதார் மற்றும் நேரடி சமையல் எரிவாயு மானியம் (DBTL) திட்டம் பற்றிய விபரங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *