அதிசயப் பழக்கடை

Vinkmag ad

Fruit Stallஅதிசயப் பழக்கடை

 

தஞ்சாவூரில் இருக்கிறது இந்த அதிசய மனிதரின் பழக்கடை.

கடையின் பெயர் “தோழர் பழக்கடை”

அங்கே சிரித்தபடி சிவப்புத் துண்டுடன் அமர்ந்து இருப்பவா் ஹாஜா மைதீன். பழங்களோடு புத்தகங்களும் இவர் கடையில் வரிசைகட்டி அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. உடலுக்கு நன்மை தர பழங்கள்உள்ளத்துக்கு நன்மை தர புத்தகங்கள்.. பழங்களைத்தான் இவர் விற்கிறாரே தவிர புத்தங்களை அல்ல. பழம் வாங்க வரும் அனைவருக்கும் ஏதாவது ஒரு புத்தகத்தை இலவசமாகத் தருகிறார்.

(சமூகம் வரலாறு அறிவியல் இலக்கியம் ஓவியம் உட்பட அனைத்து வகைப் புத்தகங்களும்)

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இது இங்கே தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் மூலம் சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  இந்தத் தோழர் பழக்கடை மிகப் பிரபலமாக அறிமுகமாகியிருக்கிறது.

இன்னும் இருக்கிறது ஆச்சரியம்.

60 வயதான இந்த குடும்பத்தலைவர் தஞ்சாவூர்பூக்காரத் தெருவைச் சேர்ந்தவர்.. இந்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட இவர் தன் மகளை கிறிஸ்துவருக்கும்  இரண்டு மகன்களை இஸ்லாமியப் பெண்களுக்கும் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். .இவர் மனைவி கவுரிஅரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர்.

தஞ்சையின் மையப் பகுதியில் இருக்கும் பூக்காரத் தெருஒரு காலத்தில் சண்டைசச்சரவுகளுக்குப் பேர் பெற்றது.

சாதிமத சண்டைகளைத் தவிர்க்க நினைத்து, 1981-இல், ‘சமாதானம் இளைஞர் நற்பணி மன்றம்‘ என்ற அமைப்பைத் துவங்கினார் ஹாஜாமைதீன்.

சாதிமதம் பார்க்கக் கூடாதுஆண்கள்குடித்து விட்டால் தெருவுக்குள் வரக் கூடாது;  சண்டைசச்சரவுகளை நியாயமான முறையில் பேசித் தீர்த்து கொள்ள வேண்டும்ஏழைஎளிய மக்களுக்குத் தேவைப்படும் உதவிகளை செய்ய வேண்டும்‘- இவைதான் இந்த மன்றத்தின் குறிக்கோள்கள்கொள்கை.

எனினும்மாற்றம் உடனே நடந்து விடவில்லை.

ஆண்டுதோறும் இங்கு ஐந்து நாட்கள் விளையாட்டுப் போட்டிகள் நடத்திவெற்றி பெறுவோருக்குஅரசியல் விழிப்புணர்வு புத்தகங்களைப் பரிசாக வழங்கி இருக்கிறார் மன்றத்தின்  மூலம் ஹாஜாமைதீன்.

அப்படி இவர் நடத்திய போட்டி மூலமாகத்தான்இவர் மனைவி கவுரி இவருக்கு அறிமுகமானார். கௌரி அப்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவி. முதலில் ஏற்பட்ட நட்புஈர்ப்பாகிகாதலாகவும் ஆனது. ஆனால் மதம்பெரிய தடையாக இருந்தது. கவுரிபிளஸ் முடிக்கிற வரைக்கும் காத்திருந்த ஹாஜாமைதீன் பிறகு அவரது வீட்டிற்குச் சென்று பெண் கேட்டிருக்கிறார். அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. ஹாஜாமைதீன் வீட்டிலும் கடும் எதிர்ப்பு. பார்த்தார். வேறு வழி தெரியவில்லை. கௌரியை அழைத்துக்கொண்டு நாகூர் சென்று  பள்ளி வாசலில் திருமணம் செய்து கொண்டார்.

அலைபாயுதே திரைப்படம் போல அதை வெளியே சொல்லாமல்அவரவர் வீட்டுக்கு அவரவர் சென்றுஅவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். ஒரு கட்டத்தில் இருவீட்டாருக்கும் விவரம் தெரிய வரபெரிய பிரச்னை ஆகிப் போயிற்று. வேறு வழியில்லாமல்வீட்டை விட்டு வெளியே வந்துதனிக்குடித்தனம் ஆரம்பித்தனர் இருவரும். பையன்கள்ஒரு பெண்ஒரு பையன்விபத்தில் இறந்து போய் விட்டார்..

இதோடு முடிந்துவிடவில்லை அதிசயம்.

இவர் கடை பில் புத்தகத்தில், ‘என் கடையில் வாங்கிய பழங்கள் வீணாகி விட்டால் அதை மாற்றித் தருவேன்‘ என்ற வாசகத்தை அச்சடித்துள்ளார். அதன்படி பழங்களை வாங்கிக்கொண்டு போனவர்கள்வீணாகிவிட்டது என்று எடுத்து வந்தால்உடனே வேறு பழங்களை மாற்றித் தந்துவிடுகிறார்.

இதனால் மிகக் தொலைவிலிருந்தும் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் இவரது தோழர் பழக்கடையைத் தேடி வருகிறார்கள். அன்பும்நேசமும்நாணயமும் இருக்கிற மனிதர்களைத் தேடி மனிதர்கள் வருவதில் வியப்பு ஒன்றும் இல்லைதானே?

நன்றி: ஆனந்தவிகடன்அவள் விகடனின் சுருக்கி எழுதப்பட்ட கட்டுரை..

(வாட்ஸ்அப்பில் கிடைத்து).

 

News

Read Previous

புதிய முயற்சி.. புதிய குறள்

Read Next

உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான சத்துக்களை தரும் எள் உருண்டை !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *