அய்மான் கல்லூரி பற்றிய பேட்டிக் கட்டுரை

Vinkmag ad

ஓன்னுதா….ன்…. ஆனா ரெண்டு !

— அய்மான் கல்லூரியின் அதிரடி கல்வித்திட்டம்

‘ஒன்னுதான் வாங்கப் போனேன் .. ஆனால் ரெண்டு கிடைத்தது..’ என்று ஒருவர் சொன்னால் நாம் எவ்வளவு சந்தோஷப்படுவோம்.

இது போன்ற வாய்ப்பைத்தருவது திருச்சியில் அமைந்திருக்கும் ‘அய்மான் பெண்கள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி’. ஒரு டிகிரி வாங்குவதற்காக சேரும் மாணவிகளுக்கு அவர்களின் விருப்பத்தின்படி அவர்களுக்கு  இஸ்லாமிய மார்க்க அறிவுக்கான பாடத்திலும் பயிற்சி அளிக்கப்பட்டு “முபல்லிகா’ பட்டம் கொடுக்கப்படுகிறது. மாலைநேர வகுப்புகளாக நடத்தப்படும் இப்பாடப்பிரிவில் சேர விரும்பும் மாணவிகளுக்கு இஸ்லாமிய மார்க்க  விஷயங்களும் கற்றுக் கொடுக்கப்பட்டு அவர்களுக்கு இப்பட்டம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாணவி ஒரு முழுமையான மார்க்க அறிஞராகவும் பல்கலைக்கழக பட்டம் பெற்ற பட்டதாரியாகவும் இரு பட்டங்கள் பெற்று வெளிவரலாம்.

ஓவ்வொருவருடமும் அய்மான் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தேர்வில் தரப்பட்டியலில் சிறந்த இடத்தில் இடம் பெற்று வருகிறது.

சென்ற ஆண்டு தேர்வில் பல்கலைக்கழகத்தில் 1,2,3,4, மற்றும் 5 என முதல் ஐந்து இடங்களை பிடித்து வெற்றிவாகை சூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.  B.Sc. ( Nutrition & Dietics )  பிரிவில் இவ்விடத்தைப் பிடித்திருக்கும் இக்கல்லூரி பி.காம் ((B.Com.)  .)  கம்ப்யுட்டர் சயன்ஸ் ( B.Sc.,Computer Science)போன்ற பாடப்பிரிவுகளிலும் பல்கலைக்கழகத்தின் தரப்பட்டியலில் இடம் பிடித்துள்ளது. 2003 ஆம் ஆண்டிலிருந்தே பல்கலைத் தரப்பட்டியலில் சிறப்பான இடம்பெற்றுவருகிறது.

மாணவிகளின் கல்வித்தரம் உயர்வரதற்காக, பாடத்திட்டம் மட்டுமல்லாமல் பொதுவான கருத்துச் செறிவுள்ள சிறப்பு வகுப்புகளையும் அவ்வப்போது தனித்தன்மை வாய்ந்தவர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. ‘தலைமைப்பண்பு’, “பட்ஜெட்” இஸ்லாத்தில் மகளிர் கல்வி:” போன்றதலைப்புகளில் பல்வேறு வகையான செமினார்கள் நடத்தப்படுகிறது.

மாணவிகளின் சுய முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, கல்லூரி நாட்களிலேயே டைப்ரைட்டிங், டைலரிங், கைவினைப் பொருட்கள செய்முறை மற்றும்  DTP உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது,

மேலும் கல்லூரி முதல்வர் ரஜப் பாத்திமா கூறும்போது, ‘மாணவிகளுக்கு நல்லொழுக்கம், மார்க்கப் பற்று, நிர்வாகத்திறன் உள்ளிட்ட அனைத்துவகை பண்புகளையும் கற்றுத்தருகிறோம். பெற்றோர்களும் முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்களானால், அய்மான் மாணவிகளை தரமிக்கவர்களாக உண்டாக்க முடீயும், ‘என்றார்.

அய்மான் கல்லூரியில் நிர்வாகி பேராசிரியர் உமர் பாஷா அவர்கள் கூறும்போது, “புதியதாக ஆடிட்டோரியம் கட்டப்பட்டுவருகிறது. இன்டர் காலேஜ்’ போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் அய்மானில் நடப்பதற்கு ஆயத்த வேலைப்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சிகள் நடைபெறும்பட்சத்தில் மாணவிகளின் தனித்திறன் சிற்ப்படைய வாய்ப்பு ஏற்படும். பிற கல்லூரி மாணவிகளைவிட அய்மான் கல்லூரி மாணவிகள் நிர்வாகத்திறனில் மேலோங்கி இருக்கிறார்கள்.’ என்றார்.

பேட்டியின் போது  அய்மான் கல்லூரியின் துணைத்தலைவர் அப்துல் வஹாப் சாஹிப் உடனிருந்தார்.

பேட்டி  : வி.களத்தூர் ஷர்

admin

Read Previous

தமிழ் இலக்கிய சாதனையாளர்கள்

Read Next

நாளை நமதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *