PRO நிகில் முருகனுடன் கலந்துரையாடல்

Vinkmag ad

PRO நிகில் முருகனுடன் கலந்துரையாடல்

 
01-07-2017, சனிக்கிழமை மாலை 5-30 மணிக்கு.
 
பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர், அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
நண்பர்களே தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் பொருட்டு தமிழ் ஸ்டுடியோ தொடர்ச்சியாக நூறு திரைக்கலைஞர்களுடன் கலந்துரையாடலை நடத்தி வருகிறது. சினிமாவின் பல்வேறு துறைகளை சார்ந்த கலைஞர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்வில் எதிர்வரும் சனிக்கிழமை சினிமாவின் முக்கிய பிரிவான மக்கள் தொடர்பு துறையை சார்ந்த நிகில் முருகன் பங்கேற்கிறார். உல்லாசம் திரைப்படம் மூலம் பி.ஆர்.ஓ வாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த நிகில் முருகன் தமிழ் சினிமாவின் முன்னணி மக்கள் தொடர்பாளராக இருந்துவருகிறார். சிறந்த மக்கள் தொடர்பாளர் விருதை பல்வேறு அமைப்புகளிடம் இருந்து பெற்றிருக்கும் நிகில் முருகன் தமிழின் மிக முக்கியமான திரைப்பட நடிகர்கள் பலருக்கும் பி.ஆர்.ஓ வாக பணிபுரிந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் நூற்றாண்டில் மக்கள் தொடர்பாளரின் பங்கு என்ன, அவர்களின் தேவை என்ன, அவர்கள் சந்திக்கு பிரச்சனைகள் என்ன, சினிமாவை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் மிக முக்கிய பணியில் ஈடுபட்டிருக்கும் இவர்களுக்கு சினிமா செய்தது என்ன என்பன குறித்து நிகில் முருகனுடன் கலந்துரையாடலாம். அனைவரும் வருக…


அன்புடன் 


தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)

www.thamizhstudio.com

News

Read Previous

இஸ்லாத்தின் தனிச் சிறப்பு

Read Next

உங்களுக்கு மழை வேறு; எங்களுக்கு வேறு..

Leave a Reply

Your email address will not be published.