15வது உலகத்தமிழ் இணைய மாநாடு

Vinkmag ad
உத்தமமும் ,  தமிழகத்தின் பாரம்பரிய மிக்க “காந்திகிராமியப் பல்கலைக் கழகத்தில் ” 15ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு, வரும் செப்டம்பர் 9,10,11 ஆகிய நாட்களில்நடைபெற உள்ளது. அதன் கருப்பொருள் “கணினியெங்கும் தமிழ், கணினியெதிலும் தமிழ்’’ என்பதாகும்.
 
இம்மாநாடு ஆய்வு அரங்கம், மக்கள் அரங்கம், கண்காட்சி அரங்கம் என மூன்று பிரிவுகளாக செயல்படஉள்ளது. தமிழை பல கோணங்களில் காணும் முயற்சி இது! 
 

தமிழ் வளர! தமிழர்கள் வளர! இம்முயற்சிக்குத் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேரவேண்டும்! நாம் அனைவரும் இணைந்து இணையம் வழித் தமிழையும் தமிழர்களையும் வளர்க்க முனைவோம்!

தொடர்ந்து இணைந்திருங்கள்! தொடர்ந்து வளரட்டும் நம் தமிழ்! கணினி வழி! இணையம் வழி!வளர்பிறை போல வழிவழிப் பெருகி வளர்ந்து வரும் இந்நிறுவனம் என்றென்றும் முழு நிலவாக இயங்க வேண்டும். மலர் இலகின! வளர் பரிதியின் ஒளி மணி மார்பை மிளிரச் செய்தது! தமிழ் மணி மிளிர வேண்டும்! தமிழ் இணைய நிறுவனம் ஒளிர வேண்டும்! இணைவோம்! இணைப்போம் அனைத்துத் தமிழர்களையும்!தமிழகத் தமிழர்களும் உலகத் தமிழர்களும் இணையம் வழி இணைவோம் இணையத் தமிழ் மாநாட்டில்!

News

Read Previous

மகிழ்ச்சி!!

Read Next

தினமுமே மகிழ்ந்திடலாம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *