நூறு குறும்படங்கள் திரையிடல் – பட்டியல் இரண்டு

Vinkmag ad
நூறு குறும்படங்கள் திரையிடல் – பட்டியல் இரண்டு
 
12 & 13-11-2016, சனி, ஞாயிறு, மாலை 4 மணி முதல் இரவு 8.30 வரை.
 
பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் நூறு குறும்படங்களை திரையிடும் நிகழ்வை சில நாட்களுக்கு முன் தொடங்கினோம். தொடக்க விழா அன்று லெனின் இயக்கிய நாக்-அவுட் உள்ளிட்ட நான்கு குறும்படங்கள் திரையிடப்பட்டது. தற்போது இரண்டாவது கட்ட திரையிடலில் 32 குறும்படங்கள் திரைப்படவிருக்கிறது. அதன் பட்டியலை கீழே கொடுத்துள்ளோம். இதில் தற்போது தொடர்பில் உள்ள இயக்குனர் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தாகிவிட்டது. சில நண்பர்களை தொடர்பு கொள்ள இயலவில்லை. எனவே மற்ற நண்பகல் உங்கள் நண்பரின் குறும்படம் இதில் இருந்தால் அவருக்கு மறக்காமல் தகவல் தெரிவித்துவிடுங்கள். பியூர் சினிமா புத்தக அங்காடி அரங்கில்தான் திரையிடல் நடைபெறவிருக்கிறது. முதலில் வரும் நண்பர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனவே சரியான நேரத்திற்கு வந்துவிடுங்கள். இந்த வாரம் விவாதம் எதுவும் இருக்காது. மொத்த குறும்படங்களும் திரையிடப்பட்ட பின்னரே விவாதம் நடைபெறும்.
சனிக்கிழமை
————————
1. சின்ன மனுஷி (14.25)
2. கழுவேற்றம் (6.44)
3. ஆசை (10.40)
4. கர்ண மோட்சம் (13.43)
5. மீசை (11.44)
6. புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம் (11.48)
7. சுவர் (15.01)
8. Roulette (4.40)
9. தர்மம் (7.19)
10. நடந்த கதை (21.00)
11. ஆயிஷா (28.16)
12. Le Sac (9.46)
13. வினா (14.45)
14. பிரசாதம் (20.34)
15. மௌன மொழி (20.21)
16. ஆயா (17.27)
17. மாசிலன் (10.45)
ஞாயிறு
————
1. A Mango In The Front Yard (10.59)
2. பங்களா நாய்கள் (10.42)
3. கதவு  (22.32)
4. நாளைக்கு மழை வரும்  (30.15)
5. ஒற்றை பூ (18.52)
6. Plastic Years (9.02)
7. யட்சி (9.59)
8. அந்தரங்கம் (16.54)
9. Come home (13.18)
10. இருமல் தாத்தா (13.19)
11. நான் 8 (28.30)
12. On duty (14.22)
13. Sub way (16.59)
14. The space (8.55)
15. யாக்கை (12.14)

 

அன்புடன் 


தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)

www.thamizhstudio.com

News

Read Previous

மின்னூல் உருவாக்குவது எப்படி?

Read Next

அதிசயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *