துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் ஜும்ஆ அல் மஜித் செண்டருக்கு கலாசார பயணம்

Vinkmag ad

துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் ஜும்ஆ அல் மஜித் செண்டருக்கு கலாசார பயணம்

 
துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் ஜும்ஆ அல் மஜித் செண்டருக்கு கலாசார பயணம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கலாச்சார பயணம் 18.02.2017 சனிக்கிழமை காலை 9 மணிக்கு மேற்கொள்ளப்பட இருக்கிறது.

ஜும்ஆ அல் மஜித் செண்டரில் பழங்கால அரபி மொழி கையெழுத்துப் பிரதிகள் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு பழங்கால திருக்குர்ஆன் உள்ளிட்டவை இருந்து வருகிறது.

அரபி மொழி நூல்கள் உள்ளிட்ட பல்வேறு மொழி நூல்கள் கொண்ட நூலகம், பாரம்பர்ய பொருட்கள், அமீரகத்தின் பழங்காலம் குறித்த தகவல்கள், பழங்கால தொலைபேசி உள்ளிட்ட பல அரிய தகவல்கள் அடங்கியுள்ளன.

ஜும்ஆ அல் மஜித் செண்டரை சேர்ந்த  குழுவினர் தமிழகத்தின் நீடூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்துள்ளனர்.

இந்த கலாச்சார பயணத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு தங்களை முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதுவை  ஹிதாயத் : 050 51 96 433

ஹமீது யாசின் : 052 777 83 41

இந்த பயணத்தில் கலந்து கொள்ள 30 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே தங்களது வருகையை முதலிலேயே பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

News

Read Previous

திருக்குர்ஆனில் அறிவியல் கருத்துகள்

Read Next

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றிலை-பாக்கு- சுண்ணாம்பு போடுவது மட்டுமே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *