ரிலாக்ஸாக ஊட்டி, முதுமலையைச் சுற்றிப் பார்க்க ஐ.ஆர்.சி.டி.சி., ஏற்பாடு!

Vinkmag ad

ரிலாக்ஸாக ஊட்டி, முதுமலையைச் சுற்றிப் பார்க்க ஐ.ஆர்.சி.டி.சி., ஏற்பாடு!

கடல் மட்டத்திலிருந்து 2 ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் மலைகளின் ராணியான ஊட்டி இருக்கிறது.

ஜூன் 7 முதல் பள்ளிகள் திறப்பதால் பரபரப்பு குறையும். இந்த சமயம் ஊட்டியைச் ஆற அமர சுற்றிப் பார்க்க உகந்த நேரம்.

அதற்கான ஏற்பாட்டை ஐ.ஆர்.சி.டி.சி., செய்துள்ளது.
ரூ.8 ஆயிரத்திற்கு 5 நாள் சுற்றுலாவை அவர்கள் வழங்குகிறார்கள்.

ஐ.ஆர்.சி.டி.சி., வழங்கும் ஊட்டி பேக்கேஜ்ஜில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் ரயில் இயக்கப்படுகிறது.

ட்ரிபிள் ஆக்குபன்சி எனும் மூன்று பேருக்கு ஒரு அறை என்ற பேக்கேஜை தேர்வு செய்தால் நபர் ஒருவருக்கு ரூ.8,000 கட்டணம்.
இருவருக்கு ஒரு அறையை தேர்ந்தெடுத்தால் ரூ.8,700 கட்டணம்.

இதில் என்னென்ன அடக்கம்?

சென்னை சென்ட்ரல் – நீலகிரி மற்றும் நீலகிரி – சென்னை சென்ட்ரல் மூன்றாம் வகுப்பு ஏசி பயணச் சீட்டு.

ஊட்டியில் இரண்டு நாட்கள் தங்குவதற்கு அறை

ஊட்டியை காரில் சுற்றிப் பார்க்க ஏற்பாடு

முதுமலையைச் சுற்றிப் பார்க்க ஏற்பாடு ஆகியவை இந்த பேக்கேஜில் அடங்கும்.

உணவு, நுழைவுக் கட்டணம் ஆகியவை நமது செலவு.

எந்த இடங்கள் கவர் செய்யப்படும்?

ஐ.ஆர்.சி.டி.சி.,யின் பேக்கேஜில் தொட்டபெட்டா மலைச்சிகரம், டீ மியூசியம், ஊட்டி ஏரி, தாவரவியல் பூங்கா, சினிமா ஷூட்டிங் ஸ்பாட்கள், பைக்காரா நீர்வீழ்ச்சி மற்றும் ஏரி, சிம்ஸ் பூங்கா, டால்பின் நோஸ் ஆகியவை ஊட்டியிலும், முதுமலையில் யானை முகாம், காட்டுக்குள் சவாரி ஆகியவையும் இந்த பேக்கேஜில் இடம்பெறும்.

News

Read Previous

எஸ்.பி. பாலசுப்ரமணியம் என்றும் வாழ்வார் !

Read Next

புதிய முதல்வர் பதவியேற்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *