மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் ஆதரவற்றோருக்கு அன்னதானம்

Vinkmag ad

முதுகுளத்தூர், : மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு முதுகுளத்தூரில் ஆதரவற்றோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  முதுகுளத்தூர் ஒன்றிய திமுக மற்றும் இளைஞர் அணி சார்பாக மு.க.ஸ்டா லின் பிறந்த நாள் விழா கொ ண்டாடப்பட்டது. இதற்கு பொதுக்குழு உறுப்பினர் முனியசாமி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் கள் முத்துராமலிங்கம் (மே ற்கு), பூபதிமணி (கிழக்கு), நகரச்செயலாளர் ஷாஜகான், இளைஞர் அணி செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

முதுகுள த்தூர் பஸ் ஸ்டாண்ட், கா ந்தி சிலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.   மேலும் பசும்குடில் தொ ண்டு நிறுவனத்தில் உள்ள ஆதரவற்றோருக்கு அன்னதானம் வழங்கினர். இதில் முன்னாள் மாவட்ட துணை த்தலைவர் செல்லமணி, முன்னாள் இளைஞர் அணி செயலாளர் ராமமூர்த்தி, பேரூராட்சி துணைத்தலைவர் பாசில் அமீன், முதுகுளத்தூர் பால்ச்சாமி, உடையார், ராமர், சக்திமோகன் (இளைஞர் அணி), இளைஞர் அணி துணைச் செயலாளர் காமராஜ், தேரிருவேலி அபுபக்கர் சித்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News

Read Previous

பயன்மிகு இணையவழிச் சேவைகள் – கட்டுரைப் போட்டி

Read Next

தானிய உணவுகள் !

Leave a Reply

Your email address will not be published.