துபாய் தமிழ்ச் சங்கத்தில் ஆடவர் தினம்

Vinkmag ad

துபாய் : துபாய் தமிழ்ச் சங்கத்தில் ஆடவர் தினம் 18.05.2012 வெள்ளிக்கிழமை மாலை கிரீக் பூங்கா அரங்கில் சிறப்புற நடைபெற்றது.

ஆடவர் தினத்திற்கு துபாய் தமிழ்ச் சங்க துணைத்தலைவரும், நிறுவனப் புரவலருமான ஏ. லியாக்கத் அலி தலைமை வகித்தார். துணைப் பொதுச்செயலாளர் பிரசன்னா மற்றும் பொருளாளர் கீதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

துவக்கமாக அமீரக தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்தினை – ஃபர்கான், வினேஷ், சஜிந்த், அர்ஜீன், விபிஷ், சிரிஷ் ஆகியோர் பாடினர். திருக்குறளை வசந்த் வாசித்தார்.

பொதுச்செயலாளர் ஜெகநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார். வரவேற்பு பாடலை  கோகுல் மற்றும் கார்த்திக் ஆகியோரும், நாட்டுப்புற பாடலை கோவிந்தராஜும் பாடினர்.

நகைச்சுவை நிகழ்வினை பாலாஜியும், மெல்லிசை நிகழ்வினை ர·பிக் மற்றும் தியாகராஜனும் வழங்கினர்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கோவை நந்தகுமார் மற்றும் சிவ்ஸ்டார் பவன் உரிமையாளர் எல். கோவிந்தராஜ் ஆகியோர் பூங்கொத்து வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கண்ணால் காண்பதும் பொய் எனும் சிறப்பு ஒலி ஒளிக்காட்சி நிகழ்வினை – விஜயேந்திரனும், பழமொழி விளையாட்டு நிகழ்வினை முனைவர் இளங்கோவும் வழங்கினர்.

நடன நிகழ்வினை மாஸ்டர். தனுஷ் மற்றும் விபின் ஆகியோரும்,  வார்த்தை விளையாட்டு நிகழ்ச்சியை கிரிவாசனும் வழங்கினர்.

சமுதாய முன்னேற்றத்திற்கு நல்ல கருத்துகளை தருவது பழைய திரைப்படங்களா அல்லது புதிய திரைப்பட்டங்களா எனும் தலைப்பில் பேராசிரியர் ஆறுமுகம் தலைமையில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.

பழைய திரைப்படங்கள் எனும் அணியில் கோவிந்தராஜ், Dr. தமிழ்வேந்தன்,  முத்துகணேசன் ஆகியோரும், புதிய திரைப்படங்கள் எனும் அணியில் சுந்தரராமன், ரகுராமன், ராஜேஷ் ஆகியோரும் பங்கேற்றனர்.

இணைப் பொருளாளர் சுந்தர்ராஜன் நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்வினை   ஏ. முஹம்மது தாஹா மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

நிகழ்வில் துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் மற்றும் உறுப்பினர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

News

Read Previous

அறஞ்செய விரும்பு – கவிஞர் இ. முஹம்மது அலி

Read Next

வன்முறை தவிர்க்கும் வழிமுறைகள் – க.அருள்மொழி

Leave a Reply

Your email address will not be published.