தாசில்தார்கள் 110 பேருக்கு துணை ஆட்சியர்களாக ப்ரமோஷன்!

Vinkmag ad

தாசில்தார்கள் 110 பேருக்கு துணை ஆட்சியர்களாக ப்ரமோஷன்!
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பணியாற்றும் வட்டாட்சியர்கள் 110- பேருக்கு, துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு அறிப்பு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாண்பமை உச்ச நீதிமன்றம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பதவி உயர்வு அளிக்கும்போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டினை பின்பற்றி பதவி உயர்வு அளிக்கும்படி தீர்ப்பு வழங்கியது.
உச்சநீதிமன்றம் வழங்கிய ஆணையின்படி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் 2004ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை வெளியிடப்பட்ட துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியல்களில் பணிமூப்பில் உரிய திருத்தங்கள் செய்து அரசு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அரசு ஆணைகளின்படி, தற்போது வட்டாட்சியர்களாகப் பணிபுரியும் 110 நபர்களுக்கு துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2022ஆம் அண்டு வரையிலான துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியல்களுக்கான ஆணைகள் விரைவில் வழங்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News

Read Previous

நிலக்கரி ஊழல் வழக்கு: பெண் ஐஏஎஸ் அதிகாரி கைது – அமலாக்கத்துறை அதிரடி

Read Next

குடும்பமாக தற்கொலை? முதலிடத்தில்தமிழகம்?

Leave a Reply

Your email address will not be published.