மவுத் செய்தி

Vinkmag ad

மவுத் செய்தி🤲 🤲 🤲
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஜனாப் ஹிதாயதுல்லாஹ் ஸித்தீகி அவர்கள் இன்று 14/08/20 வெள்ளிக்கிழமை அதிகாலை வபாஃத் ஆகிவிட்டார்கள்.

புதுக்கோட்டையில் அல்குர்ஆன்-சுன்னாஹ் அடிப்படையில் மார்க்கத்தை போதித்த புகழ்பெற்ற இமாம், மார்க்க அறிஞர் மர்ஹூம் சுல்தான் அகமது ஸித்தீகி (பாகவி)அவர்களின் மகன்களில் ஒருவர் ஹிதாயதுல்லாஹ் ஸித்தீகி அவர்கள். தந்தையார் பாகவி அவர்கள் 1940-50 களில் புதுக்கோட்டை பெரியபள்ளிவாசலில் இமாமாக இருக்கும் காலத்தில் ஷிர்க், பித்அத், மற்றும் மூடப்பழக்கங்களை கண்டித்து பயான் மூலம் நற்பணி ஆற்றியவர் என்பது வரலாற்று குறிப்பு.

ஜனாப் ஹிதாயதுல்லாஹ் ஸித்தீகி அவர்கள் சென்னை தலைமை செயலகத்திலும் புதுகை கலெக்டர் அலுவலகத்திலும் அரசு உயர் அதிகாரியாக பணி செய்து ஓய்வு பெற்றவர். தற்சமயம் புதுக்கோட்டை ஸலாம் நகரில் வசித்து வந்தார்.

அன்னார் தனது வாழ்நாளில்
இஸ்லாமிய வாழ்க்கையை நெறிதவறாமல் பின்பற்றுவதில் ஆர்வமும் முயற்சியும் மிக்கவராக விளங்கினார்.

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் 14/08/2020 அன்று திருச்சியில்
நடைபெறும். அன்னாருக்காக நாம் அனைவரும் பின்வருமாறு துஆ செய்வோம். அன்னாருக்கு ஷஹீதுடைய அந்தஸ்தை அல்லாஹ் அருள துஆ செய்வோம்(ஆமீன்)

>>>>>>>>>>>>>>>>>>
அல்லாஹும்மபி(F)ர் லஹு வர்ஹம்ஹு வஆபி(F)ஹி வபு(F) அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பி(B)ல்மாயி வஸ்ஸல்ஜி வல்ப(B)ரதி வநக்கிஹி மினல் கதாயா கமா நக்கைத்தஸ் ஸவ்ப(B)ல் அப்(B)யள மினத் தனஸி வ அப்(B)தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்ஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வ அத்ஹில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபி(B)ல் கப்(B)ரி
இதன் பொருள் :
இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிருந்து காப்பாயாக!
==========================

News

Read Previous

பேரிடர் காலத்தில் மக்களின் சேவை

Read Next

பிரிட்டிஷ் இந்தியாவை அதிரச் செய்த பின்ஹே தீர்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *