தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை போதுமா?

Vinkmag ad

source – https://www.vikatan.com/government-and-politics/policies/what-the-educationalists-have-to-say-about-preferring-tamil-medium-scholars-for-government-jobs

தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை போதுமா? என்ன சொல்கிறார்கள் கல்வியாளர்கள்!
கா . புவனேஸ்வரி

கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்த முறைகேடுகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி ஏற்பட்டுள்ளது.

பட்டப் படிப்பு மட்டுமின்றி 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பிலும், தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிப்பது தொடர்பான மசோதாவை, மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார், நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

இந்த மசோதா, அரசுப் பணியிடங்களில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும். பட்டப்படிப்பு மட்டுமல்லாமல் இனி, பள்ளிக் கல்வியில், அதாவது 10 மற்றும் 12-ம் வகுப்புகளிலும் தமிழ்வழியில் படித்திருந்தால் மட்டுமே, அவர்கள் அரசுப் பணியில் முன்னுரிமை பெற முடியும். இதற்கு முன்பாக இளங்கலைப் படிப்பிலும், முதுகலைப் படிப்பிலும் தமிழ் வழியில் படித்தவர்கள் அரசுப் பணியில் முன்னுரிமை கோரி வந்தனர். ஆனால், தற்போது பள்ளிக் கல்வியிலிருந்தே தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்ற முறையை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் உள்ள சாதக பாதகங்கள் என்னென்ன என்று கல்வியாளர்களிடம் பேசினோம்.

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு “தமிழ் வழியில் படித்த, தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிப்பது என்பது நியாயமான அணுகுமுறை. தாய்மொழியில் படிக்கின்ற மாணவர்களால் விவரங்களை எளிதில் புரிந்து கொள்ள முடியும். அத்தோடு அவர்களால் ஆழமாகவும் சிந்தித்து செயல்பட முடியும். குறிப்பாக, நம் சமூகத்தில் வாழும் மக்களின் பண்பாட்டுத் தேவைகளை உணர்ந்து செயல்பட முடியும் என்பது மொழியியல் குறித்த பல்வேறு ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

பிரின்ஸ் கஜேந்திர பாபு
பிரின்ஸ் கஜேந்திர பாபு

அந்த வகையில் தாய்மொழியில் படித்த மாணவர்களுக்கு அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை அளிப்பது என்பது, மக்களாட்சி மாண்புக்கு உட்பட்ட நியாயமான அணுகுமுறை. இது தமிழர்களின் நீண்டகால கோரிக்கையும்கூட. தற்போது அந்தக் கோரிக்கை, சட்ட வடிவம் பெறுவது வரவேற்கக் கூடியது. அதே நேரத்தில் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது சில சிக்கல்கள் எழலாம். அவற்றைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் பேசுகையில் “கல்லூரிப் படிப்பை மட்டும் தமிழ் வழியில் படித்திருந்தால் போதாது; பள்ளிக் கல்வியும் மாணவர்கள் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும். அப்போதுதான் அரசுப் பணியில் முன்னுரிமை பெற முடியும் என்ற முறை இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளது. தமிழக அரசின் இந்த அணுகுமுறை வரவேற்கக் கூடியது. அதே நேரத்தில், அரசுப் பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்வி நடைமுறைப்படுத்தியுள்ள திட்டத்தைத் தமிழக அரசு நிறுத்த வேண்டும். தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கம் உண்மையிலேயே ஆட்சியாளர்களுக்கு இருக்குமானால், அதை ரத்து செய்ய வேண்டும்.

பெ .மணியரசன்
பெ .மணியரசன்

அதேபோன்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உள்ள விதிமுறைகளிலும் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். குறிப்பாக, அரசுப் பணியில் சேர்ந்து தமிழில் 2 வருடங்களுக்குள் தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதை நீக்கிவிட்டு, தமிழ் தெரிந்திருந்தால்தான் அரசுப் பணியில் வேலை என்ற நிலையை உருவாக்க வேண்டும். அதற்காக அவர்களைத் தமிழ்வழியிலேயே படிக்க வேண்டும் என்று கூறவில்லை. குறைந்த பட்சம் மொழிப் பாடங்களையாவது படித்திருக்க வேண்டும். அந்த முறையைத் தமிழ்நாடு தேர்வாணைய விதிமுறையில் கொண்டு வர வேண்டும்” என்றார்.

முருகன்
முருகன்
டி.என்.பி.சி தேர்வு தொடர்ந்து எழுதி வருபவர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை தொடர்ந்து எழுதி வருபவரும் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருபவருமான முருகன் பேசுகையில் “தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளிக்கும் மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் சட்டப் பேரவையில் தாக்கல் செய்திருப்பது வரவேற்கத்தகுந்தது. இது தொடர்பாக ஏற்கெனவே தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனைச் சந்தித்து, கோரிக்கை மனுவை அளித்திருந்தேன். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளிக்கும் 20 சதவிகித இட ஒதுக்கீடு முறையை தி.மு.க தலைமையிலான அரசுதான். 2010-ம் ஆண்டு கொண்டுவந்தது. அது 2012-ம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. இந்த இட ஒதுக்கீடு முறை, உண்மையிலேயே தமிழ் வழியில் படித்தவர்களைச் சென்றுசேரவில்லை.

மாறாக, தமிழ் வழியில் முன்னுரிமை பெற வேண்டும் என்பதற்காக ஆங்கில வழியில் படித்தவர்களும் தொலை தூரக்கல்வியில், பட்டப்படிப்பை முடித்துவிட்டு அரசுப் பணியில் சேரும் முறைகேட்டைத் தொடர்ந்து செய்து வந்தனர். அதனால் உண்மையிலேயே தமிழ்வழியில் படித்தவர்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லாமல் போனது. கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்த முறைகேடுகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி ஏற்பட்டுள்ளது. அதேபோன்று தமிழ் வழியில் படித்தவர்கள், குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளின்போது மெயின் தேர்வு எழுதும்போது, ஆங்கிலத்தில் எழுதுபவர்களுக்கே அதிக மதிப்பெண்களை வழங்கி வருகிறார்கள். அந்த முறைகேட்டையும் தடுக்க வேண்டுமென்றால் தமிழ் மற்றும் ஆங்கிலம் என, இந்த இரண்டு மொழிகளில் எழுதுபவர்களுக்குச் சமமான மதிப்பெண் வழங்க வேண்டும்” என்றார்.

News

Read Previous

திருப்புக்கொளியூர் அவிநாசியும் சீனாவும்

Read Next

கீழடியில் பெரிய மண்பானை கண்டெடுப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *