FIFA

Vinkmag ad
========================(ருத்ரா
முப்பத்தேழு வினாடிகளில்
187 மில்லியன்
ஆகா ஓகோக்கள்.
கூகிள்
புல்லரித்தது.
வண்ண வண்ண‌
தேசக்கொடிகளின்
தேசிய கீதம்
விஸில்களில் தான்.
கடிகார முட்கள் கூட‌
ரோஜாவின் முட்களாய்
தருணங்களின்
உதட்டைக்கடித்தன.
அந்த வழியே பறந்த‌
பட்டாம் பூச்சிகள் கூட‌
பட்டாசு வெடித்தன.
உலகம் சுருங்கிப்போனது….
விறைத்த‌
விசைத்த‌
விடைத்த‌
மனிதக்கால்களிடையே
பாவம்
ரப்பர் பந்தாய்.
உற்சாகம் கொப்பளிப்பதில்
சூரியன் வரை
ஸ்ட்ரா நீண்டு
அந்த அக்கினிக்கே கூட‌
மகிழ்ச்சியின்
கோகோ கோலா தான்.
=========================================

News

Read Previous

பாலைப் பூக்கள்

Read Next

ஏலக்காயில் இவ்ளோ இருக்கா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *