வீரத்தின் விளேநிலமே!

Vinkmag ad

வீரத்தின் விளேநிலமே!
———————————————

அலியே ( ரழி)யே சீறும் புலியே
அரபுலகின் சிந்தனைக் கவியே
ஆற்றல்மிகு அறிவின் ஒளியே
அன்பில் வற்றாத நைல் நதியே

வீரத்தின் விளை நிலமே
வெற்றி திக்கின் இமயமே
ஈமானின் இளைய நிலவே
ஈருலக சர்தாரின் இதயக்கனியே

மாமன் மகளின் மணாளரே
மாதர்குல தாயின் மன்னவரே
மகன்கள் ஹஸன் ஹுசைனின்
மார்பில் நிலைத்த மாவீரமே

பதரில் நின்றது முதல் அணியே
பயமின்றி போரிட்ட மாமணியே
பகை நடுங்கும் வீர வாளால்
பறித்து தந்தது வெற்றிக்கனியே

கோட்டை முற்றுகைப் போர்
கொடி ஏந்தி வந்த வீரர் அலி(ரழி)
கொடியவரை கொன்று குவித்து
கொட்டியது வெற்றி முரசின் ஒலி

மாநபி மதீனா ஏகிய போது
மாற்றார் அமானிதம் சில தந்து
அமானிதம் அனைத்தும் கொடுத்து
அடுத்தநாள் வந்து சந்தி என்றார்

அன்றிரவு அகால வேளை
அண்ணலார் தனி விரிப்பில்
அலி(ரழி)யார் படுத்துறங்க
எதிரிகள் வந்து போர்வை நீக்கி
என்ன தைரியம் என வினவ

நபிகளார் சொன்னார்
நாளை எனை சந்தி என
நாவினால் அவர் சொன்னது
நானிலத்தில் பொய்த்ததில்லை

நாளும் இனி பொய்ப்பதில்லை
நிச்சயம் சந்திப்பேன் என்று
நம்பிக்கையில் நான் துயின்றேன்
நடப்பதெல்லாம் நன்மைக்கே என்றார்

அண்ணலார் கரம் பட்டு
அவனியில் வந்த கடனை
அவர்தம் பொன்னுடல் கழுவி
அந்த கடனையும் தீர்த்து மகிழ்ந்தார்

கவின் முகில் மு முகமது யூசுப் உடன்குடி

News

Read Previous

அழகு பொருந்திய பாமாலை

Read Next

எலும்பில் ஏற்படும் வலிகளும்.. அறிகுறிகளும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *