வீடு

Vinkmag ad
வீடு
========================================ருத்ரா
வேப்பமரத்து கிளையிலிருந்து
இலைகள் உதிர்ந்தபின்
கீழே இறைந்து கிடக்கும்
உலர்ந்த குச்சிகள்..
ஒவ்வொன்றாய்
என் அலகு கவ்வ..
நீலமும் மினுபினுப்பும் கலந்த‌
என் கழுத்து
திருக்கு முறுக்காய் சுழல..
சிறகடித்து
அந்த கம்பத்தில் உட்கார்ந்து
அப்புறம் அருகில் உள்ள
நுணாக்கிளையில் உட்கார்ந்து
அங்கே உள்ள மைனாவை விரட்டி
ஒற்றைக்கண் அரக்கனான‌
காக்காவுக்கும் கடுக்காய் கொடுத்துவிட்டு
அந்த வீட்டு மாடிக்கூடத்து
ஏஸி மின் விசிறிக்கூண்டில்
கற்றை கற்றையாய் குச்சிகளை
அடுக்கினேன்.
எல்லாம் ரெடி.
குறுக்கும் நெடுக்குமாய்
இருக்கையும் மஞ்சமும்
பின்னி வைத்தபின்
பக்கூம் பக்கூம் என்று
டூயட் பாடி
அவளுடன் அணைவாய்
ஆரம்பிக்க வேண்டியது தான்
என் இல்லறத்தை..
…..
“அடியே இங்கே வந்து பார்
குச்சி அடைசலை..
இதை சுத்தம் செய்து விடு..
இல்லாவிட்டால்
அந்த ஏஸி மூச்சில்
புறாவின் புழுக்கை நாற்றமும்
சேர்ந்து விடும்..”
எஜமானி இன்ஸ்ட்ரக் ஷன்கள் கொடுக்க‌
வேலைக்காரியின் துடைப்பம்
அந்த வேப்பங்குச்சிகளில் பின்னப்பட்ட‌
கனவுகளை நொறுக்கி
கூட்டிப்பெருக்கிக்கொண்டிருந்தாள்.
ஒரு வித ரோஸ் நிற
கண்விழிகளைக்கொண்டு
சிலுப்பி சிலுப்பி பார்த்த‌
ஆண் புறாவாகிய நான்
அதோ
அந்த மொட்டை வானம் சென்று
அலகை கூர் தீட்டப்பொகிறேன்.
மீண்டும் வேப்பங்குச்சிகள் சேகரிக்க.
=================================================

News

Read Previous

பார்வைகள் பலவிதம் !

Read Next

நோன்பின் நோக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *