விடுதலை

Vinkmag ad
விடுதலை 
 
பிறப்பு என்பது கருவின் விடுதலை
இறப்பு என்பது உயிரின் விடுதலை
சிரிப்பு என்பது துன்பத்தின் விடுதலை
வெறுப்பு என்பது சினத்தின் விடுதலை
கற்றல் என்பது கல்லாமையின் விடுதலை
நிற்றல் என்பது கற்றலின்  விடுதலை
செல்வம் என்பது வறுமையின் விடுதலை
வீரம் என்பது கோழையின் விடுதலை
புண்ணியம் என்பது பாவத்தின் விடுதலை
கண்ணியம் என்பது கயமையின் விடுதலை
புதுமை என்பது பழமையின் விடுதலை
முதுமை என்பது இளமையின் விடுதலை
பகுத்தறிவென்பது மடமையின் விடுதலை
பரந்த அறிவென்பது பாமரன் விடுதலை
காலை என்பது இரவின் விடுதலை
மாலை என்பது பகலின் விடுதலை
பிரிவு என்பது உறவின் விடுதலை
தெளிவு என்பது தேக்கத்தின் விடுதலை
சொர்க்கம் என்பது நரகத்தின் விடுதலை
சுதந்திரம் என்பது அடிமையின் விடுதலை
 விடுதலை வேண்டும் மானிடரெல்லாம்
விடுதலை பெறுவீர் ,வீருகொண்டெழுந்தே .

News

Read Previous

தக்காளி சூப்பும்! சுதந்திரமும்!!

Read Next

முதுகுளத்தூர் வட்டார அளவில் தனித்திறன் போட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *