வாழ்க்கை

Vinkmag ad

“வாழ்க்கை “

  • திருச்சி முஹம்மது அபூதாஹிர்

தோஹா – கத்தார்

 

  • கொஞ்ச நாட்கள்தானே

வாழ்க்கை,

கொஞ்சிப் பேசிவிட்டு போங்கள்!

சில நாட்கள்தானே

வாழ்க்கை,

சிரித்து பேசி விட்டுப் போங்கள் !

 

  • பிரச்சினை

என்னவாகத்தான் இருந்தாலும்

பிரிவு அதற்க்கு தீர்வல்ல !

கொள்கையில் வேறுபாடு இருக்கலாம்

அதற்க்கு

கோபம் முடிவல்ல !

 

  • பிறந்தவர்கள் யாரும்

நிரந்தரமாக

இங்கு இருந்ததில்லை!

 

மறைந்தவர்கள் இருந்தக் காலத்தை விட

அவர்கள்

இறந்துப் பல ஆண்டுகள் ஆகி விட்டன !

 

  • சொற்பக் கால

வாழ்க்கை !

அற்ப சண்டைகள் ஏன் !

புண் ஏற்பட்டால் கூட

ஆற்றி விடலாம் !

மனம் புண்பட்டால்

புற்றுநோய் மாதிரி !

 

  • பிறரால்

நம் உடலில் செந்நீர் கூட,

பீறிட்டு  வரலாம்!

ஆனால்

நம்மால் பிறர் கண்ணில்,

நீர் கூட வரக்கூடாது!

 

  • நமக்கு

எதுவும் கிடைக்காமலே போகட்டும்!

நம்மால்

பிறருக்கு எதாவது நன்மை

கிடைக்கட்டும் !

 

  • மகிழ்ச்சியான தருணங்களை

கொடுப்பினையாக

எடுத்துக் கொள்ளுங்கள்!

கஷ்டமான தருணங்களை

படிப்பினையாக எடுத்துக் கொள்ளுங்கள் !

******************************************************************************************************

News

Read Previous

பதவி ! ——— கவிக்கோ அப்துல் ரஹ்மான்

Read Next

நீங்கள் எந்த கொள்கை? என்று கேட்பவர்களுக்கு எனது பதில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *