ரணம் சொட்டும் தோரணங்கள்?

Vinkmag ad

ரணம் சொட்டும் தோரணங்கள்?
_________________________________________ருத்ரா

காதலர் தினம் என்றால்
இங்கே உள்ள
இருண்ட கண்டத்துக்குரல்கள்
குரைத்துத் தள்ளுகின்றன.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே
“கந்தர்வ மணம்” என்று
சொல்லி
பெண்ணைத் தவிக்க விட்டு
கரு கொடுத்து விட்டுப்போன‌
கந்தல் புராணங்கள்
எத்தனை?எத்தனை?
கடலில  படுத்துக்கிடந்து
பக்திப் பாய் விரிக்கும்
பரந்தாமனுக்கும்
இடப்புறம் ஒன்று வலப்புறம் ஒன்று
நடுப்புறம் நெஞ்சில் ஒன்று
என்று காதல் பொங்க மனைவியர்
எத்தனை? எத்தனை?
யுகங்கள் கடந்த போதும்
இந்த காலங்கள் தோற்றுப்போனது
ஒன்றே ஒன்று தான்.
அது தான் காதல்!
அதன் பக்தியிலும் பஜனையிலும்
பெண்களை நிர்வாணப்படுத்தியாவது
லீலைகள் புரிந்து
அதை சூட்சும அடையாளமாய் சொல்லி
மோட்சத்தையும்
நிர்குண பிரம்மத்தையும்
புல்லரிக்கும்படி புல்லாங்குழல்
ஊதும் உங்கள் ஊதைக்காற்று தானே
இன்று
இளசுகளை
மயக்கம் கொள்ள வைக்கிறது.
இருந்தாலும்
இந்த புதிய தலைமுறை
புதிய சமுதாயத்தின்
விடியல் விளிம்பில் நின்று கொண்டு
இந்த உணர்ச்சிபீலிகளை
“ஃபீல்”பண்ணுகின்றன.
இதற்கா இங்கே
எதிர்ப்பாய் இத்தனை
ரணம் சொட்டும் தோரணங்கள்?
____________________________________________________
https://www.thehindu.com/news/national/karnataka/ban-valentines-day-celebrations/article33825628.ece

News

Read Previous

வெங்காயத்தின் மருந்துவ பயன்கள்

Read Next

திமுக கூட்டணி அதிருப்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *